வேப்ப மரம், புங்க மரம் இல்லையா? சுத்தமான காற்றை சுவாசிக்கணுமா? அப்போ பாம்புச் செடியை வீட்டில் வைங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் வளர்க்கப்படும் பாம்புச் செடியின் நன்மைகள் என்ன தெரியுமா? சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க இந்த செடி பயன்படுகிறது.

மரம் நடுவது என்பது முக்கியமானதாகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. மரம் வளர்த்தல் நிழலை கொடுப்பதுடன் சுத்தமான காற்றையும் கொடுக்கிறது. மழையையும் கொடுக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

What are the health benefits of snake plants to be grown in house

இதன் நிழலில் நாம் படுத்துத் தூங்கினால் சுத்தமான காற்று கிடைக்கும். அதில் உள்ள மருத்துவக் குணங்கள் மூலம் நமக்கும் பலன் கிடைக்கும் என்பார்கள். ஆனால் இன்று செடி வைக்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு பல வீடுகள் வத்தி பெட்டி சைஸில் நெருக்கமாக கட்டப்பட்டு வருகிறது.

மேலும் சிலர் மாடி தோட்டங்களில் செடி, கொடிகளை வளர்க்கிறார்கள். அவற்றால் பசுமையான சூழல் நிலவும், ஆரோக்கியம் பேணி காக்கப்படும், காரணம், நாம் வளர்க்கும் செடிகளுக்கு எந்த ரசாயன உரமும் போடுவதில்லை. இதனால் அதில் விளையும் காய்கறிகள் ஆர்கானிக்காக உள்ளது. தற்போது சப்போட்டா, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கூட நம்ம ஊர் சீத்தோஷ்ணத்திற்கு ஏற்ப சிலர் வளர்க்கிறார்கள்.

எல்லாம் சரி! ஆனால் ஏசி அறையில் எந்த வித வெளிகாற்றும் இல்லாமல் இருக்கிறோமே ! காற்றோட்டத்திற்கு என்ன செய்வது! இதற்குத்தான் இந்த பாம்புச் செடிகள் உள்ளன. அதென்ன பாம்பு செடிகள், பார்ப்பது குரோட்டன்ஸ் போல் இருக்கும். ஸ்னேக் பிளாண்ட் என்பதன் தாவரவியல் பெயர் சான்சிவிரியா டிரைஃபாஸ்சியாட்டா ஆகும்.

இது ஆசியா, ஆப்பிரிக்காவை சேர்ந்ததாகும். இந்த செடியின் இலைகள் வாளை போல் இருக்கும். இந்த செடிகளை எளிதாக வளர்க்கலாம். எளிதாக பராமரிக்கலாம். இன்டோரில் வளர்க்கத் தகுந்த செடிகள் இவையாகும். பாம்புச் செடிகளின் இலைகள் விஷத்தன்மை கொண்டவை. எனவே குழந்தைகள், செல்லப்பிராணிகள் அதை உட்கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதன் இலைகள் பச்சை, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் மிகவும் நீளமாக வளரக் கூடியவை. இந்த செடிகளை உள்ளேயும், வெளியேயும் எங்கு வேண்டுமானால் வளர்க்கலாம். இதற்கு தண்ணீரும் குறைந்த அளவுதான் தேவைப்படும். அதிக தண்ணீர் ஊற்றினால் இலைகள் அழுகிவிடும்.

இந்த பாம்புச் செடிகள் காற்றை சுத்திகரிப்பதில் சிறந்து விளங்குவதாக நாசா பரிந்துரைக்கிறது. காற்றில் உள்ள விஷத்தன்மை கொண்ட பொருட்களான பென்சீன், ஃபார்மால்டிஹைட், ஜைலின், டிரைகுளோரோதைலின் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்துகிறது. காற்றை இந்த செடிகள் சுத்தப்படுத்துவதால் அறையில் ஈரப்பதம் அதிகரித்து ஆக்ஸிஜனும் அதிகரிக்கிறது.

இந்த செடிகளின் குணங்களை சொல்ல போனால் நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கும். இவை அலங்கார பொருட்களை போல் அலங்கரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை ஒரு தண்ணீர் உள்ள பாட்டிலில் போட்டு வளர்த்தால் பெரிய வேர்களுடன் வளரும். பிறகு அதை எடுத்து வேறு தொட்டியில் நட்டு கொள்ளலாம்.

ஸ்னேக் பிளான்ட் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கிறது. அது போல் நச்சுக்களையும் சுத்தப்படுத்துகிறது. இதனால் காற்றின் மூலம் ஏற்படும் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற வியாதிகள் ஏற்படாது. இரவு நேரத்தில் கார்பன் டை ஆக்ஸைடை குறைக்கின்றன. வறண்ட இலைகளில் கூட photosynthesis நடக்கும்.

கேன்சர் எனப்படும் புற்றுநோய்கள் வராமல் இந்த செடிகள் பாதுகாக்கிறது. புற்றுநோய்களுக்கு காரணமான தொலுயின்,ஜைலின்,பென்சின், ஃபார்மால்டிஹைட் உள்ளிட்டவைகளை காற்றில் இருந்து சுத்தப்படுத்துவதால் இது கேன்சரை எதிர்த்து போராடும் செடியாகவும் பார்க்கப்படுகிறது. இதன் இலைகளின் வளர்ச்சிக்கேற்ப நர்சரிகளில் விலை நிர்யணம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+