மண்டையில் நீர் கோர்த்து விட்டதா? தலைபாரத்தை போக்க உதவும் நொச்சி இலை.. மூலிகை தலையணை பற்றி தெரியுமா?
வேலூர்: மண்டையை பிளக்கக்கூடிய தலைபாரம் வந்துவிட்டால், சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்க நேரிடும்.. தலையில் நீர் கோர்த்து கொண்டு, சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்திவிடும்.. இப்படியான தலைபாரம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? மண்டையில் நீர் கோர்த்தல் குறைய வீட்டு வைத்தியங்கள் என்னென்ன? சுவாச கோளாறுகளுக்கு உதவும் மூலிகைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தலைபாரம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. முக்கியமாக சைனஸ் பிரச்சனை பிரதான காரணமாக இருந்து வருகிறது.

மண்டையில் நீர் கோர்த்தல்
அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை, காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், மழை மற்றும் பனிக்காலங்களில் தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் பைக்கில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பது என ஏகப்பட்ட காரணங்களால் தலையில் நீர்கோர்த்து, தலைவலி தொந்தரவு வருகிறது.
அதேபோல, மன அழுத்தம், ஒற்றைத்தலைவலி, கண் குறைபாடுகள் காரணமாகவும் தலைவலி வரலாம்.. இதில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி வந்தால், பின் மண்டை வரை குடைச்சலும் வலியும் இருக்கும்.. அதிகமான வியர்வை வந்தாலும், மண்டையில் நீர்கோர்த்துக் கொள்ளும்.. இதற்கு எளிய மூலிகைகள் கை கொடுத்து மருந்தாக உதவுகின்றன.
நொச்சி தைலம்
குறிப்பாக, நொச்சி தைலம், பீனிச தைலம், சுக்கு தைலம் போன்றவற்றை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வரும்போது, மண்டையில் நீர் சேராது.. சளித்தொல்லையும் வராது.
கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.. இரவு தூங்கும்போது, முகம் மட்டுமல்லாமல், கழுத்து பகுதியிலும் இந்த பற்றை தடவி விட வேண்டும்.. இது மண்டையிலுள்ள நீரை மறுநாளே வெளிக் கொண்டுவந்துவிடும்.. தலைபாரமும் நீங்கிவிடும்.
அல்லது கருப்பு வெற்றிலையுடன் கற்பூரத்தையும் வைத்து விழுதாக அரைத்து பற்று போடலாம். அதேபோல, ஒரு கைப்பிடி மல்லி விதைகளை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.
கற்பூரவல்லி இலைகள்
தோசை கல் அல்லது மண் சட்டியை அடுப்பில் தீயில் வைத்து சூடு செய்து கொள்ள வேண்டும்.. ஒரு காட்டன் துணியை உருட்டி மண் சட்டியில் வைக்க வேண்டும். அந்த துணியில் ஓரளவு சூடு ஏறியதுமே, ஒத்தடம் போல நெற்றியிலும், நெஞ்சு பகுதியிலும் வைத்து எடுக்கலாம்.. இதனாலும் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். தலைவலியும் குறையும்
தூதுவளையின் பூக்களில் துவையல் அரைத்து சாப்பிடலாம். யூகலிப்டஸ் இலைகளை வைத்தும் ஆவி பிடிக்கலாம்.. வேப்பிலை, புதினா, துளசி கற்பூர வல்லி இலைகளை நீரில் சேர்த்தும் ஆவி பிடிக்கலாம்.. சுக்கு நீரில் இழைத்து போடுவதாலும், நீர் இறங்கிவிடும்.
வெற்றிலையின் வெற்றி
குழந்தைகளுக்கு சளி தொல்லை இருந்தால், இளம் வெற்றிலையின் காம்பை கிள்ளி வாயில் போட்டு அதன் சான்றை விழுங்க சொல்ல வேண்டும்.. இதனால் சளி கரைந்து வெளியேறும்..
நொச்சி இலைகளையும், சிறிது பச்சரியையும், ஒரு தலையணை உரைக்குள் நிரப்ப வேண்டும்.. இறுதியில் இதனை வைத்தே அந்த உரையை தலையணையாக தைத்து, அல் படுத்து உறங்க வேண்டும். இதனால், நீண்ட கால தலைவலி, சைனஸ், தலைபாரம் போன்றவை நீங்கிவிடும்.. மாதம் ஒருமுறை உரையிலிருந்து அரிசி, இலைகளை மாற்றி, வேறு நிரப்பி வைத்து மீண்டும் தைத்து கொள்ளலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications