சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்பெஷல் பழ வகைகள்!
சென்னை: இன்று பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது கவலைக்குரிய விஷயமே. இதற்கு மிக முக்கியமாக உணவு முறை, மன அழுத்தம், சமூக வாழ்க்கை முறையில் மாற்றம், துரித உணவு, போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த சர்க்கரை நோய் பிரச்சனை வந்துவிட்டால், பின்பு எந்த ஒரு உணவையும் விரும்பி, நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் சில வகையான உணவில் சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்திருக்கும் என்பதால், உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அதற்காக இனிப்பாக இருக்கும் உணவு வகைகள், மற்றும் பழங்கள் அனைத்தும் சாப்பிடக்கூடாது என்பதில்லை. சொல்லப் போனால், பழங்கள் கூட இனிப்பாகத்தான் இருக்கும். எல்லா வகை கனி ரகங்களிலும், வைட்டமின் அல்லது நல்ல ஊட்ட உணவாக, சுவை, இனிப்பு, மற்றும் மனமாக இருக்கும். ஆனால் உண்ணும் உணவில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், சில வகையான பழங்கள் மூலம் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். இது இயற்கை அளித்த வரப்பிரசாதமாகும்.

முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், இந்த வகையான பழங்களை தினமும் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதுண்டு. மருத்துவர் ஆலோசனை படி தினமும் குறைந்தது 2 பழங்களாவது சாப்பிடுவது நல்லது. இயற்கையாகவே அனைத்து விதமான பழங்களிலும் ஒவ்வொரு நன்மைகளும், மருத்துவ சிறப்பம்சங்கள் உள்ளது. எனவே சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், சாப்பிடவேண்டிய சில பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நாவல்பழம் (Jamun Fruit): சமஸ்க்ரிதத்தில் இப்பழத்திற்கு மஹாபல (Mahaphala) என்ற பெயர் உண்டு. ஜாமுன் (Jamun), ஜம்புல் (Jambhul) கருப்பு மற்றும் ஜாவா பிளம் (Black and Java plum) என பல பெயர்களால் அறியப்படுவதுண்டு. சதைப்பற்றுள்ள பழம் மற்றும் சாறுள்ள பழமாகும். இராமாயணத்தில் ராமர் தனது 14 ஆண்டுகால வனவாசத்தின் போது இந்த பழத்தை உண்டு உயிர் பிழைத்தார் என்று சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுவதுண்டு. மிக மிக முக்கியமாக, சர்க்கரை நோயாளிகளுக்கான பிரேத்தியேக பழம் என்றே சொல்லலாம். ஏனெனில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.
நெல்லிக்காய் (Gooseberry): நெல்லிக்காயின் ஆயுர்வேத மருத்துவம், நீண்ட ஆயுள் தரக்கூடிய அருமையான கனி மற்றும் பல நோய் தீர்க்கும் நிவாரணி, அதில் ஒன்று சர்க்கரை நோய். வைட்டமின் சி மற்றும் நார்சத்து அதிகம் உள்ளதால், தினமும் சாப்பிடும்போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும், உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களுள் ஒன்றாகும்.
பேரிக்காய் (Pear): பேரிக்காய் ஆப்பிள் வகையை சேர்ந்தது, ஆப்பிளை விட பேரிக்காயில் வைட்டமின் ஏ, சி அதிக அளவில் உள்ளது, அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பசியின்மையை போகும், இதில் உள்ள நார்சத்து, உண்ட உணவை நன்கு ஜீரணமாக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த சுவையான பழத்தை சர்க்கரை நோயாளிகள் காலையில் சிறந்த சிற்றுண்டியாக சாப்பிடலாம். எனவே தினமும் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
பப்பாளி (Papaya): நன்கு கனிந்த சுவை மற்றும் நல்ல ஊட்ட உணவாக இருக்கக்கூடிய பழம் இந்த பப்பாளி பழம். பசியோடு இருக்கும்போது இப்பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் கிடைத்துவிடும். வைட்டமின் ஏ நிறைந்துள்ள பப்பாளி, பல்வேறு குணங்கள் கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு துண்டுகளை உணவோடு சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இதில் வைட்டமின்கள், இதர கனிமச்சத்துக்கள், அதிகம் நிறைந்துள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
மற்ற பழங்கள்: சர்க்கரை அளவை குறைக்க தினமும் இந்த வகையான பழங்களை சாப்பிட்டு வரலாம். கொய்யாப்பழம், ஆரஞ்சு, கிவி, திராட்சைப்பழம், மாதுளை, பெர்ரி, ஆப்பிள், அன்னாசி என மேற்கூறிய அனைத்துவிதமான பழங்களை அளவோடு சாப்பிட்டு, உடல் அரோக்கியதை பாதுகாக்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications