ஆரஞ்சு அதிசயம்.. திராட்சையின் மகிமை.. நீங்க "ஆக்டிவ்வா" இருக்கணுமா? இந்த டிப்ஸ் பாருங்க.. சூப்பர்
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் ஒருசில விதைகளை பார்ப்போம்.
பெரும்பாலும் பழத்தின் விதைகளில் ஊட்டச்சத்து நிறைந்திருக்கின்றன.. இது ஆரோக்கியத்தை அதிகரிக்க தூண்டுகோலாகிறது.. விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, அல்சைமர் எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகளும் உள்ளன.

வைட்டமின்கள்: நாம் பழங்களுடன் அதன் விதைகளை சாப்பிடும்போது, அவை சமநிலைப்படுத்தும் தின்பண்டங்களாக செயல்படுகின்றன. இதனால், வைட்டமின் A, E, சரியாக உறிஞ்சுவதுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கிறது.
அந்தவகையில், ஆரஞ்சு பழ விதைகளில், பழத்தைவிட அதிக நன்மை உள்ளதாம்.. சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இந்த விதைகள் திகழ்கின்றன.. இதனால், உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள முடியும்... உடலிலுள்ள நச்சுக்களை நீக்க இந்த விதைகள் துணைபுரிகின்றன.
முலாம் பழங்கள்: அதேபோல, அந்தவகையில், முலாம் பழத்தின் விதைகளை எடுத்துக் கொண்டால், அதை உலர்த்தி சிற்றுண்டியாகவே சாப்பிடலாம். முலாம் பழ விதைகளில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன.. வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுவதோடு, எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. தோல் பராமரிப்பு, தலைமுடி வளர்ச்சிக்கு இந்த விதை உதவுகிறது.
முலாம் பழ விதைகளில் லினோலிக் அமிலம் போன்ற பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த விதைகள், இதய செயல்பாட்டிற்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், நார்ச்சத்துக்களும் உள்ளதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
திராட்சைப்பழம்: திராட்சைப்பழத்துடன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதே நல்லது.. காரணம், வைட்டமின் E, C, லினொலெனிக் ஆசிட், பாலிபீனால் போன்றவை இந்த திராட்சையில் உள்ளது.
வைட்டமின் E சத்தைவிட, திராட்சை விதை 50 விழுக்காடு அதிக சக்தி கொண்டதாம்.. வைட்டமின்-C சத்தைவிட 20 மடங்கு சக்தி கொண்டதாம். எந்தவித பக்கவிளைவும் இல்லாத, சத்து நிறைந்த பழம் இந்த திராட்சையாகும்..
திராட்சை ஜூஸ்: கருப்பு திராட்சையை விதையுடன் அரைத்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மந்த நிலை நீங்கி, நன்றாக பசி எடுக்கும். நினைவாற்றலை வளர்ப்பதால், இந்த திராட்சையை குழந்தைகளுக்கு நிறைய தர வேண்டும். உடலிலுள்ள கழிவுகளை அகற்றுவதில், திராட்சை மிக முக்கிய பங்காற்றுகிறது.. புற்றுநோய் செல்களை அழித்து தடுக்கக்கூடியது..
பெண்களுக்கு கருப்பை கோளாறுகளை திராட்சை நீக்குகிறது.
ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம், கருப்பு திராட்சையை சாப்பிட வேண்டும்.. இதனால், ரத்த நாளங்களை விரிவடைவதுடன், ரத்தசோகையும் தடுக்கப்படும்.. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
வயிறு, வாய்ப்புண்களை ஆற்றுவதுடன், கண்களுக்கும் இந்த திராட்சை மிகவும் நல்லது.. கண் தொடர்பான பிரச்சனைகள் நெருங்காமல் காக்கப்படும்.. தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வலி வீக்கம் உள்ளவர்கள், திராட்சை விதைகளுடன் பழத்தை சாப்பிட்டு வந்தாலே தீர்வு கிடைக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications