இட்லி, தோசைக்கு மாவு அரைத்து! ஃபிரிட்ஜில் வைத்தாலும் புளித்துவிட்டதா? ஃபிரஷ்ஷாக்க ஈஸி டிப்ஸ்!
சென்னை: இட்லி, தோசை மாவை அரைத்து என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் அது நாளானால் புளிக்கத்தான் செய்யும். அவ்வாறு புளித்தால் அதை ஃபிரஷ் மாவாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் மாவு புளித்துவிட்டால் அதை ஃபிரஷ்ஷாக மாற்ற எளிதான டிப்ஸை பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் முக்கிய உணவுப் பொருளாக இட்லி, தோசை விளங்குகிறது. இதை எந்த நாட்டுக்குச் சென்றாலும் நம் தென்னிந்திய மக்கள் மறக்காமல் வீட்டில் தயார் செய்து சாப்பிடுகிறார்கள். இட்லி என்பது ஆவியில் வைத்து அவிப்பதால் உடலுக்கு நல்லது.

ஆனால் இட்லி தட்டில் எண்ணெய் தடவாமல் துணியை வைத்து இட்லி ஊற்றினால், அந்த இட்லி ஆரோக்கியமானது. உடல் நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பிறந்த பெண்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களை இட்லி சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
இதுதான் எளிதில் ஜீரணிக்கும் என்பதால் இதை உண்ண சொல்கிறார்கள். இட்லி, தோசைக்கு வீட்டிலேயே மாவு அரைத்து பயன்படுத்துகிறார்கள். இதை பிரிட்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்துகிறார்கள். இந்த சமயங்களில் இட்லி மாவு புளித்துவிட்டால், அதில் இட்லி, தோசை என எதை செய்தாலும் அதுவும் புளித்துவிடும்.
மேலும் அதை சாப்பிட முடியாமல் வீணாகிவிடும். அதற்கு அந்த புளித்த மாவில் 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் நீர், மாவின் மேல் தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும். அது போல் கடலை மாவு, சர்க்கரை, வெண்ணெய் ஆகியவற்றை தேவைக்கேற்ப எடுத்து தண்ணீரில் கரைத்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
புளித்த மாவுடன் இந்த பேஸ்ட்டை கலந்தால் மாவில் உள்ள புளிப்பு நீங்கி புதிது போல் ஆகிவிடும். இதன் பிறகு தோசையாக ஊற்றினால் மாவு கொஞ்சம் கூட புளிக்காது, அதே சமயம் ருசியாகவும் இருக்கும். இன்னொரு வழி- மாவில் ரவை அல்லது அரிசி மாவு கலந்து தோசை வார்த்தால் புளிப்பு இருக்காது.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம், கேரட் துருவல், தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவில் கலந்து ஊத்தப்பம் போல் ஊற்றி சாப்பிட்டாலும் மாவு புளிக்காது. மாவு அரைத்தவுடன் உப்பு போட்டு கலக்காமல் தேவையான போது உப்பு போட்டாலும் மாவு புளிக்காது.
எல்லாவற்றுக்கும் மேல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. அதற்கான தன்மை போனால் அந்த பொருள் எதிர் விளைவை ஏற்படுத்தும். எனவே பிரிட்ஜில் வைத்தாலும் சீக்கிரம் அவற்றை பயன்படுத்தி காலி செய்துவிடுங்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications