பிளேட்லெட் குறைஞ்சிடுச்சி! "ஐஎஸ்டி" கொடுக்க போறாங்க! மார்ச் 22ல் நடந்தது என்ன! ஹுசைனி போட்ட பதிவு
சென்னை: வில்வித்தை வீரரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி உயிரிழந்த நிலையில் அவருக்கு கடைசி 4 நாட்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை அவரே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கராத்தே, வில்வித்தை, நடிகர் உள்ளிட்ட பன்முகத் திறமையை கொண்டவர் ஷிஹான் ஹுசைனி. இவர் எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதர் என இவருடன் பழகியவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.

அவருக்கு திடீரென ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு வந்த ரத்த புற்றுநோய் அரியவகை என்பதால் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்பு அவருக்கு தினந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும் என்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் நாட்களை எண்ணிக் கொள்ளும் நிலையில்தான் அவருடைய உடல்நிலை இருக்கிறது என கூறிய போதும் ஹுசைனி கவலைப்படாமல் தைரியமாக இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணிக்கு அவர் காலமாகிவிட்டார். அவர் உயிர் வாழ தினந்தோறும் 2 லிட்டர் ரத்தம் ஏற்றப்படுவதாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
கடந்த 4 தினங்களுக்கு முன்பு (மார்ச் 22) அவர் தனது போஸ்ட்டில் கூறியிருப்பதாவது: "நான் இன்றைய தினம் காலை 11 மணிக்கு ஐசியுவிற்கு மாற்றப்படுகிறேன். எனது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள், வெள்ளை அணுக்களின் அளவு உள்ளிட்டவை குறைந்துவிட்டன.
எனக்கு இம்யூனோ சப்பிரஸ்ஸிவ் தெரபி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. (இந்த மருந்துகள் நோயாளிகளின் உறுப்புகள், திசுக்களை சேதப்படுத்துவதை தடுக்கும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது பெரும்பாலானோருக்கு நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை தருவார்கள்).
இந்த மருந்துகளுக்கு பக்கவிளைவுகளான மாரடைப்பு, கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு, சில வாரங்களுக்கு கண் பார்வை தெரியாதது, வாய், காது, ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் உள்ளிட்டவை இருக்கும். இந்த சிகிச்சையை நான் உடனே எடுத்துக் கொள்ள வேண்டும் என எனது சகோதரியிடம் மருத்துவர்கள் விளக்கினார்கள்.
இந்த மருந்து கொடுப்பதால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் எல்லாமே ஒவ்வொரு நோயாளியை பொறுத்து மாறுபடும் என டாக்டர் விளக்கினார். அது போல் இது வெற்றியடைவதற்கு 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். அது போல் அந்த மருந்து எத்தனை விலை அதிகம் என்பதையும் தெரிவித்தனர்.
நான் அவரிடம் சொன்னேன், "உங்கள் அனுபவம் மற்றும் ஞானத்தின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனக்கு ஏதேனும் நடந்தாலும் நான் உங்களிடம் கிளைம் செய்ய மாட்டேன்" என உறுதியளித்தேன்.
இந்த மருந்து நான் முதல்முறையாக எடுத்து கொள்வதை நினைத்து எனக்கு தூக்க மாத்திரை கொடுத்தும் தூக்கம் வரவில்லை. என்னை ஐசியூவிற்கு கொண்டு சென்றனர். அங்கு எனது போனை வைத்திருக்க மட்டுமே மருத்துவர் அனுமதித்தார். 4 நாட்களுக்கு என்னை யாரும் பார்க்கக் கூடாது என கூறிவிட்டார். காமனாவும் மகிமாவும் கூட வரவில்லை. அக்னி பிரவேசம் என்ற பெயரில் எனது அனுபவங்களை எழுத திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications