கிருஷ்ணகிரி சிவராமன் சாப்பிட்டு இறந்த எலி பேஸ்ட் .. பிரச்சனை வெளியே தெரியவே 72 மணி நேரம் ஆகும்
சென்னை: கிருஷ்ணகிரி முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் சாப்பிட்டு இறந்த எலி பேஸ்ட் விஷத்தின் தன்மை வெளியே தெரியவே 72 மணி நேரம் ஆகும். மெல்ல கொல்லும் இந்த விஷம் பலரையும் கொன்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மஞ்சள் பாஸ்பரஸ் என்று அழைக்கப்படும் இந்த மருந்து கல்லீரல் , சிறுநீரகங்கள் , இதயம் மற்றும் செரிமான அமைப்பின் உறுப்புகளை சேதப்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார். போலீசிடம் இருந்து தப்ப முயன்ற போது அவரது வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இதனிடையே சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நேற்று காலை தகவல்கள் வெளியானது. அவர் சாப்பிட்ட மருந்து எலி பேஸ்ட் ஆகும். எலி பேஸ்ட்டில் மஞ்சள் பாஸ்பரஸ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சள் பாஸ்பரஸ் (YP) தொழில்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இராணுவ வெடிமருந்துகள், தீப்பெட்டிகள், உரங்கள், பட்டாசுகள் மற்றும் எலிகளை கொல்ல பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து குறித்து மருத்துவர்கள் கூறுகையில், எலிகளுக்கு தக்காளி மற்றும் வாழைப்பழங்களில் தடவி எலிகளுக்கு வைப்பர் எலிகள் இதை சாப்பிட்டால் போதும் உடனே இறந்து விடும். சிலர் தற்கொலை முயற்சி என்று இந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வருவார்கள். இவர்கள் முதல் இரண்டு நாளைக்கு நன்றாகவே இருப்பார்கள். மூன்றாவது நாளில் தான் பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பிக்கும். இதில் கலந்துள்ள மஞ்சள் பாஸ்பரஸ் தான் மிக ஆபத்தானது.
இது எல்லா உடல் உறுப்புகளையும் செயல் இழக்க வைக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக கல்லீரல், கிட்னி பல்வேறு உடல் உறுப்புகளை பாதிக்கும். இது லிவரில் வைட்டமின் கே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உடலில் குடல், மூளை, வயிறு என எங்கிருந்து வேண்டுமானாலும் ரத்தம் லீக் ஆகும். இதை கண்டுபிடிக்க 3வது நாளில் தான் பிடி ஐஎன்ஆர் என்ற டெஸ்ட்டை மருத்தவர்கள் எடுக்கிறார்கள்
எலி பேஸ்ட் விஷத்தை உட்கொண்ட 1 முதல் 8 மணிநேரங்களுக்கு இடையில், நபர் உட்கொண்ட அளவைப் பொறுத்து வலுவான பூண்டு போன்ற வாசனையுடன் ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுப்பார்கள்.. இரத்தத்தில் கல்லீரல் என்சைம்கள் மற்றும் பிலிரூபின் அதிகரிப்பு போன்ற லேசான அறிகுறியற்ற நிலைகளே ஏற்படும். ஆனால் 3வது நாளில் கடுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். அவர்களது உடலில் ஒவ்வொரு பாகமாக செயல் இழந்து கல்லீரல் மற்றும் கிட்னி செயல் இழந்து டாயலிசிஸ் செய்யும் சூழ்நிலை உருவாகும் சிலருக்கு 4 அல்லது 7 நாட்களில் இறப்பு வரும். சிலருக்கு இறப்பு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எலி பேஸ்ட் சாப்பிட்டால், அது குடலில் ஒட்டிக்கொண்டு, ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடுகிறது. ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பித்து இறந்து விடுகின்றனர். உண்மையில் இந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிர் பிழைத்தவர்கள் என்று பார்த்தால், அவர்கள் வாயில் வைத்து பின்னர் துப்பியிருப்பார்கள் . ஆனால் சாவு பயத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வருவார்கள் இப்படி வருபவர்கள் மட்டுமே கடந்த 2012ம் ஆண்டு வரை உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காலக்கட்டம் வரை எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு வந்த யாருமே உயிர் பிழைத்த அதிசயம் நடந்தது இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் இப்போது ஓரளவு மருந்துகள் மூலம் குணமாக்க முடிகிறது என்று கூறும் மருத்துவர்கள், அப்படி பிழைத்தவர்களும் மிக குறைவுதான் என்று தெரிவித்தனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications