"மனித குலத்தின் கொடூரமான நோய்.." 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட மோசமான பாதிப்பு! கவனமா இருங்க மக்களே
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 10 வயதே ஆன இளம் பெண் ஒருவருக்கு மிகவும் கொடூரமான ஒரு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதனால் அவருக்கு இப்படியொரு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
மருத்துவ துறையில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் அரங்கேறி வருகின்றன. முன்பு சரி செய்யவே முடியாது என்று இருந்த நோய்களுக்குக் கூட எளிதாகச் சிகிச்சை அளிக்க முடிகிறது. இதனால் மனிதர்களின் சராசரி ஆயுளும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் இன்னுமே கூட சில நோய்கள் அல்லது மதிப்புகளுக்குச் சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியொரு மோசமான பாதிப்பு தான் 10 வயதான ஆஸ்திரேலிய சிறுமி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மிகக் கடுமையான வலி ஏற்படுகிறதாம்
என்ன பாதிப்பு: ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த 10 வயது சிறுமி பெல்லா மேசி என்பவருக்கு அரிதான ஒரு நிலை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது வலது காலை மிக லேசாக அசைத்தால் அல்லது யாராவது தொட்டால் கூட பொறுக்கவே முடியாத வலி ஏற்படுமாம். அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக பிஜி சென்ற போது வலது காலில் திடீரென பெல்லாவுக்கு கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்குச் சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) இருப்பது உறுதி செய்யப்பட்டது. மனிதக்குலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்றே இது பொதுவாக அழைக்கப்படும். ஏனென்றால் இந்த பாதிப்பு ஏற்படுவோருக்குப் பொறுத்துக் கொள்ளவே முடியாத அளவுக்குக் கடுமையாக வலி ஏற்படுமாம்.

குழந்தைப் பருவம்: இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், "இந்த பாதிப்பு அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அவரது அன்றாட வாழ்க்கையை முடக்கியது. குழந்தைப் பருவத்தைக் கூட என்ஜாய் செய்ய முடியாமல் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் பொறுக்கவே முடியாத கொடூரமான வலியுடன் போராடி வருகிறார். இதனால் அவரது வலது கால்- இடுப்பு வரை இயக்கம் இழந்துவிட்டது. அவர் இப்போது படுத்த படுக்கையாகவே இருக்கிறார். அவர் இப்போது சக்கர நாற்காலியில் முடங்கியுள்ளார்" என்றார்.
CRPS என்பது ஒரு அரிய மற்றும் குணப்படுத்தவே முடியாத பாதிப்பாகும். இது தவிர்க்கவே முடியாத அதீத வலியை ஏற்படுத்தும். இதில் பாதிப்பு ஏற்படும் போது காலில் ஏதோ கூர்மையான பொருளை வைத்துக் குத்துவதைப் போல இருக்கும். மேலும், சில நேரத்தில் அது கூச்ச உணர்வையும் காலில் ஏற்படுத்தும். இந்த பாதிப்பு ஏற்பட்டோருக்கு நாம் விவரிக்கவே முடியாத அனைத்து விதமான வலியும் ஏற்படுமாம்.
முடக்கிப் போட்டது: துள்ளிக் குதித்து குழந்தைப் பருவத்தை என்ஜாய் செய்த பெல்லாவை இது ஒரு இடத்தில் முடக்கிப் போட்டுள்ளது. இந்த நோயைக் குணப்படுத்தும் மருந்தும் இதுவரை நம்மிடம் இல்லை என்பதால் அவரது குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர்.
இது சிறிய காயங்கள் அல்லது அறுவை சிகிச்சையால் கூட ஏற்படுமாம். இதனால் 10 வயது பெல்லாவால் அசையக் கூட முடியவில்லை. இதனால் அவருக்குப் பள்ளிக்குச் செல்லவோ, நண்பர்களுடன் விளையாடவோ கூட முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் இதற்கான சிகிச்சை இல்லாத நிலையில் உலகின் எதாவது ஒரு நாட்டிலாவது இதற்கான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது பெற்றோர் பல நாடுகளின் மருத்துவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர்'
இருப்பினும், துருதிஷ்டவசமாக எங்கும் அவருக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தாங்கவே முடியாத வலியுடன் அந்த பெண் ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்.












Click it and Unblock the Notifications