படுத்த 2வது நிமிடம் குழந்தை மாதிரி தூங்கலாம்.. ராணுவத்தில் கூட "இந்த" முறை தான் பாலோ பண்றாங்க!
சென்னை: தூக்கமின்மை என்பது இப்போது மக்களிடையே இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. பல்வேறு காரணங்களால் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே 2 நிமிடங்களில் தூங்கும் ராணுவ தூக்க முறை பற்றி இப்போது பலரும் பேசி வரும் சூழலில், அது உண்மையில் பலன் கொடுக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
இந்தக் காலத்தில் பலருக்கும் தூக்கமின்மை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாகத் தூக்கமின்மை பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இரவு 10 மணிக்குப் படுத்தால் கூட நள்ளிரவைத் தாண்டியும் கூட தூங்க முடியாமல் சிரமப்படும் பலரும் நாம் பார்த்திருப்போம்.

ராணுவ தூக்க முறை
சீக்கிரம் தூங்குவது எப்படி என இணையத்திலேயே கூட நீங்கள் பல வீடியோவை பார்த்திருக்கலாம். அப்படி இருக்கும் ஒரு முறை தான் 'ராணுவ தூக்க முறை' (military sleep method)! இதைப் பின்பற்றினால் வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் தூங்கலாம். மன அழுத்தம், தூக்கமின்மை தலைவிரித்தாடும் இக்காலத்தில் தூக்கப் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையும். இணையத்தில் இதுபோல 1008 முறை இருக்கே என நீங்கள் கேட்கலாம். ஆனால், இது சும்மா யாரோ அடித்துவிடுவது கிடையாது. அறிவியல் ரீதியாகவே இந்த முறையில் சீக்கிரம் தூங்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.
ராணுவ வீரர்களுக்கு மன அழுத்தமான சூழலிலும் விரைவாகத் தூங்க உதவ இந்த முறை உருவாக்கப்பட்டது. 1981ல் வெளியான 'ரிலாக்ஸ் அண்ட் வின்: சாம்பியன்ஷிப் பெர்ஃபார்மன்ஸ்' (Relax and Win: Championship Performance) என்ற புத்தகத்தில் இது முதலில் விளக்கப்பட்டு இருந்தது.
என்ன செய்ய வேண்டும்
- முதலில் சவுகரியமான ஒரு இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள்.. கண்களை மூடி, மெதுவாகச் சுவாசியுங்கள். வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆழ்ந்த சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
- அடுத்து உங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு தசையையும் தளர்த்துங்கள். நெற்றியில் தொடங்கி கன்னங்கள், தாடை என வரிசையாகத் தளர்த்தவும்.
- அடுத்து உங்கள் தோள்களை ரிலாக்ஸ் செய்யுங்கள்.. பின்னர் கைகள், உள்ளங்கைகள், விரல்கள் என படிப்படியாகத் தளர்த்தவும்.
- உங்கள் கவனத்தை மெதுவாக மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்குக் கொண்டு சென்று, மெல்ல அதையும் தளர்த்தவும். தொடைகள் முதல் கால்விரல்கள் வரை ஒவ்வொரு தசை மற்றும் மூட்டையும் தளர்த்துங்கள்.
- உடல் தளர்ந்த பிறகு, அமைதியான எதாவது ஒரு காட்சியை மனதில் யோசியுங்கள்.. அமைதியான ஏரியில் படகில் பயணிப்பது.. அல்லது உங்களுக்கு ஏது ரிலாக்ஸை ஏற்படுத்துமோ அதைப் பற்றி நினையுங்கள். வேறு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம்.
பலன் கொடுக்குமா
இவை சாதாரணமாகத் தோன்றினாலும், இந்த ராணுவ தூக்க முறை நல்ல பலனைக் கொடுக்கும் என்பது நிரூபணமான ஒன்றாகும். இது நரம்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் நரம்பு மண்டலத்தை ஓய்வு நிலைக்கு மாற்ற உதவுகிறது. சரி இப்போது முக்கிய கேள்விக்கு வருவோம்.. நூற்றாண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்தப் பழமையான யுக்தி இப்போது கை கொடுக்குமா?
மருத்துவர்கள் சொல்வது என்ன
அதற்கு முன்பு இந்தக் காலத்தில் ஏன் தூங்குவதில் பலருக்கும் சிரமம் இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். பகல் நேரத்தில் மன அழுத்தம், செல்போன், கணினி, டிவி அதிகம் பார்ப்பது மற்றும் அழுத்தம் நிறைந்த வேலை ஆகியவை உங்கள் நரம்பு மண்டலத்தைத் தொடர்ந்து விழிப்புணர்வு உடன் வைத்துக் கொள்கிறது. இதனால் இரவு நேரத்தில் மூளை அமைதியடைவதற்குப் பதிலாக மேலும் ஆக்டிவாக இருக்க ஆரம்பிக்கிறது. எனவே, முன்பைவிட இப்போது தான் இந்த ரிலாக்ஸ் செய்யும் முறை இன்னுமே பயனுள்ளதாக இருக்கும்.
இது தொடர்பாக நரம்பியல் நிபுணர் டாக்டர் ஷோபா பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "இந்த நுட்பம் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.. இதயத் துடிப்பைக் குறைக்கும்.. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, இன்றைய மன அழுத்தமான, தூக்கமில்லா காலங்களில் அதிக பயனுள்ளதாகவே இருக்கும்" என்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications