குழந்தைக்கு திக்குவாய் வருவதற்கான காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது?
சென்னை: பொதுவாக திக்குவாய் (Stammering, fluency disorder) வருவதற்கான சரியான காரணம் இதுதான் என்று உறுதியாக கூற முடியாது. இதில் பலவிதமான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2-5 வயது உள்ள குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை (Childhood Onset Fluency Disorder) என்று கூறப்படுகிறது. திக்குவாய், குழந்தையின் சாதாரண மழலையின் தொடர்ச்சி என்றும் கூறப்படுகிறது. உடலில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான நரம்புகளில் ஏதேனும் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டு, திக்குவாய் வருவதற்கான முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. மற்றபடி அவர்களுக்கு எல்லாவித அறிவு கூர்மை, உடல் வளர்ச்சி எல்லாமே சாதாரணமாக தான் இருக்கும். மேலும் இடது கை பழக்கம் உள்ளவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது.
சுமார் 65% இப்பிரச்சனை உள்ள குழந்தைகள் வளர வளர முற்றிலும் மாறிவிடும், 35% குழந்தைகள் மட்டும் பாதிக்கப்படுவதாக மருத்துவத்தில் கூறப்படுகிறது. வளரும் பருவத்தில் மனதில் ஏற்படக்கூடிய மன அழுத்தம், முரண்பாடுகள், பயங்கள், எதற்கெடுத்தாலும் பதட்டம், போன்ற மற்ற பல காரணங்களும் இருக்கின்றது. மேலும் குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாருக்காவது இப்பிரச்சனை இருந்தால், அவர்களுடைய குழந்தைகளுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்பட்டால் பெற்றோருக்கு மிகுந்த பயம் மற்றும் குற்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட பெற்றோர்கள் குற்ற உணர்வும், பதட்டமும் கொள்ளவேண்டாம், இதற்கு மூலகாரணம் என்ன என்பதையும், அதை சரி செய்ய வழிமுறைகளை, தீர்வு தரும் வழிகளை கண்டறிவது மிகவும் அவசியமாகும்.

பொதுவான உடலியல் காரணம்
சில குழந்தைகளுக்கு, இடது கையில் எழுதும் பழக்கம் இருக்கும், அப்படிப்பட்ட குழந்தைகள் வலது கை பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யும்போதும், இயல்பாக 2-5 வயதில் பேச்சு வளர்ச்சியும், வார்த்தையின் ஒலி வளர்ச்சியும், மொழிவளம் சரியாக வளர்ச்சியடையாமல், பேசும் திறனில் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. மற்ற பிற காரணங்கள், ஒரே குடும்பத்தில் அல்லது பரம்பரை வழியாக யாருக்காவது இப்பிரச்சனை இருந்தால், (3:1) குழந்தைகளில் ஒரு சிலருக்கு வருவதாக கூறப்படுகிறது.
கற்றல் மற்றும் நடத்தை
பொதுவாக பேசும்போது, உச்சரிக்கும் ஒலியின் அலைகள், காது வழியாக மூளைக்குச் சென்றடைகிறது. மூளையிலிருந்து பேச்சுத்திறன் அமைத்திருக்கும் இடத்தில் சில பாதிப்பு ஏற்படுவதால், குழந்தைகள் திக்க ஆரம்பிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது பழக்கத்தால் கற்றுக்கொள்ளப்படும் குறை என்றும், சுற்றுப்புற சூழலில், ஏற்படும் பதட்டத்தினால், பயம், ஆகிய காரணத்தினாலும் குழந்தைகள் திக்க ஆரம்பித்து, நாளடைவில் அந்த பழக்கமே தொடர்ச்சியாகிவிடுகிறது என்பது மற்றொரு காரணம்.
பெற்றோர் குழந்தையுடன் உரையாடுதல்
பெற்றோர், குழந்தையிடம் (Cause Of Stuttering) திணறல் காரணம், என்ன என்பதை கவனிக்க வேண்டும். திக்கும் குழந்தைகள் எழுத்துக்களை திரும்ப திரும்ப உச்சரிக்கும்போது, சுத்தமாக ஒலி எழுப்பவே முடியாது. இது பேச்சை ஆரம்பிக்கும்போது தான் இருக்கும். மற்றபடி இடையில் திருப்பி திருப்பி சொல்வது இருக்காது. அவர்களிடம் தனித்து பல முறை உரையாடி, அதற்கு பின்பு தான் முடிவுக்கு வர வேண்டும். பெற்றோர் குழந்தையிடம் வேகமாக உரையாடும்போது, தாங்களும் வேகமாக பேச முயற்சிக்கும்போது, திக்கி திக்கி பேசுவதுண்டு. அல்லது இயல்பாகவே குழந்தையிடம் திக்குவாய் இருக்கிறது என்றும், அதின் தீவிரம், அவர்கள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் திக்கி பேசுகிறார்கள் என்றும், அல்லது பயம், பதட்டத்தில் பேச முற்சிக்கும்போது திக்குவாய் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். திக்குவாயினால் குழந்தையின் மனநலம் எப்படி பாதிக்கப்படுகிறது எனபதை பார்க்க வேண்டும். இதனால் குழந்தை அவமானமாக கருதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு. எனவே பெற்றோர்கள், குழந்தைகள் பேச முயற்சிக்கும்போது, அவர்கள் முழுமையாக சொல்லி முடிக்கும் வரை பொறுமையுடன் கேட்க கவனம் செலுத்த வேண்டும். எனவே குழந்தையின் நடவடிக்கைகள் மூலம் கண்டு, முடிவுக்கு வரவேண்டும்.
சிகிச்சை முறைகள்
எந்தவித பதட்டமும் இல்லாமல், தளர்ந்து நிதானமாக பேச கற்றுக்கொடுத்தல், சத்தத்துடன் அல்லது ஒரு ஓசையுடன் பேச கற்றுத்தருதல், சுவாசத்தை கட்டுப்படுத்தி, நிதானமாக பேச கற்றுக்கொடுக்கவேண்டும். மிக கடினமாக, கஷ்டப்பட்டு திக்குவதை சகஜமாக எடுத்து கொள்ளச்செய்வது, இவ்வாறாக திக்குவாய் உள்ள குழந்தைகளிடம் பலவிதமான அணுகுமுறைகள் மேற்கொள்ளவேண்டும். இவற்றை தினசரி நடைமுறைப்படுத்தி, நல்ல மருத்துவரிடம் அணுகி, சரியான சிகிச்சை பெறுவது மிக முக்கியமாகும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications