ஓ இதுதான் மேட்டரா.. விரதம் இருக்கும் போது நமது உடலில் என்ன நடக்கும்.. விரதத்தால் இத்தனை நன்மைகளா!
சென்னை: நம்மில் பலரும் அவ்வப்போது விரதம் இருப்போம்.. இதற்கு மத ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படும். ஆனால், விரதம் இருக்கும் போது நமது உடலிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெறும் அது குறித்து நாம் பார்க்கலாம்.
பல்வேறு மதங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது ஒரு சடங்காகவே இருக்கிறது. இதற்கு ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கும். அதுபோல இருக்க வேண்டும் விரதம் இருக்கும் சமயத்தில் நமது உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பல ஆயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு நாம் இந்த வாழ்க்கை முறைக்கு வந்துள்ளோம். ஆனால், பண்டைக் காலத்தில் மனிதர்களுக்கு இப்படிக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவுகள் கிடைத்ததே இல்லை.
மனிதர்கள்: பண்டைக் கால மனிதர்கள் இப்போது விலங்குகளைப் போலவே உணவை எடுத்துக் கொள்வார்கள். அதாவது கூட்டமாக வாழ்ந்த பண்டை மனிதர்கள் நீண்ட நேரம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். அதன் பிறகு வேட்டையாடி கிடைக்கும் உணவை ஒரு பிடி பிடிப்பார்கள். எனவே, பண்டை மனிதர்களுக்குக் கடுமையான பசி எடுத்த பிறகே சாப்பிடுவார்கள். அதாவது மனித உடல் அடிக்கடி சாப்பிடுவதற்குப் பழக்கப்பட்டதே இல்லை. அடுத்து நீண்ட நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் என்ன செய்யும் எனப் பார்க்கலாம்.
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சாப்பிடாமல் இருப்பதும் நல்லதுதான். குறைந்தது 12 மணி நேரம் வரை சாப்பிடாமல் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவர் பால். இதுபோல தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டு நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது மது உடலில் இருக்கும் ஹார்மோன்களுக்கு தேவைப்படும் ஒரு ஓய்வு கிடைக்கும்.. இது அடுத்த நாள் நமது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அவ்வப்போது intermittent fasting இருப்பதும் நமது உடலுக்கு நன்மையைத் தரும்.

வளர்ச்சி ஹார்மோன்: மேலும், இதுபோல சாப்பிடாமல் இருக்கும் போது அது நமது வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தியையும் அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.. அதாவது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது நமது தோல், குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவும்.
அதேபோல நமது உடலில் கார்போ ஹைடிரேட் அளவு அதிகரிக்கும் போது அது உடலில் பல வித பாதிப்பை ஏற்படுத்தும். நாம் சாப்பிடும் அரிசிச் சாதத்தில் பெரும்பாலும் கார்போஹைடிரேட் தான் இருக்கிறது. இதனால் அது நமது உடலைப் பல வகையில் பாதிக்கும். இந்த கார்போ ஹைடிரேட் புரத்துடன் இணையும் போது அது உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். நமது உடலில் இருக்கும் செல்களை பாதிக்கத் தொடங்குகிறது.
எப்படி உதவும்: இது குறித்து டாக்டர் பால் தனது வீடியோ ஒன்றில், "அது இதயத்தில் சேரும் போது இதய பாதிப்பை ஏற்படுத்தும். கணையத்தில் சேர்ந்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும் தோலில் சேரும் போது சீக்கிரம் வயதாவது போலத் தெரியும். அதேபோல இது மூளையில் சேரும் போது மிகவும் கொடூரமான டிமென்ஷியா ஞாபக மறதி நோய் ஏற்படும். இந்த நோய்ப் பாதிப்புகளை எல்லாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது மூலம் தடுக்க முடியும்.

மேலும், நமது உடலில் கூடுதல் கொழுப்பு இருந்தால் அது கேன்சர், இதய பாதிப்பு, நீரிழிவு நோய்களையும் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. அவ்வப்போது நீண்ட நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் இந்த கொழுப்பு காணாமல் போகும். மேலும் பொதுவாக வயிற்றில் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா என இரண்டு இருக்கும். அவ்வப்போது இதுபோல நீண்ட நேரம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருந்தால் இருந்தால் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஸ்லீப்பர் செல்கள்: வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் போது, விரைவாகப் பசிக்கும். எனவே நாம் அதிகம் சாப்பிடுவோம். இதுவே கொழுப்பு சேர காரணம். கெட்ட பாக்டீரியாக்கள் ஸ்லீப்பர் செல்களை போலத் தான். நாம் சாப்பிடாமல் இருந்தால் அது தானாகக் காணாமல் போகும்" என்றார்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications