அந்தரங்க உறுப்பில் புண், அரிப்பு ஏற்படுகிறதா? உறவில் நாட்டமில்லையா? உஷார்.. டாக்டர் பரூக் விளக்கம்
நீரிழிவிற்கான முக்கிய அறிகுறியாக விளங்கும் ஆண் குறி / பெண் குறி பூஞ்சைத் தொற்று- டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறியாக விளங்குவது ஆண்குறி, பெண் குறி பூஞ்சை தொற்று குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பாதாவது: நீரிழிவிற்கான முக்கிய அறிகுறியாக இந்திய ஆண்களிடம் அறியப்படுவது ஆண்குறி பூஞ்சைத் தொற்று மற்றும் அதனால் ஏற்படும் முன் தோல் புண்/ அழற்சி சர்க்கரை கட்டுப்பாடின்றி இருப்பதால் எதிர்ப்பு சக்தி குன்றிய நிலையில், ஆண் குறியின் மொட்டுப் பகுதியிலும் (GLANS PENIS) அதை மூடியிருக்கும் முன் தோல் ( PREPUCE) பகுதியிலும் கேண்டிடா எனும் பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
இதன் விளைவாக முன் தோலுக்கும் குறியின் மொட்டுப் பகுதிக்கு இடையே பிசு பிசுவென வெள்ளை நிறத்தில் திரவம் போன்று சேரும். அதிக அரிப்பும் சிவந்து போதலும் புண் ஏற்படுதலும் உண்டாகும். இதை BALINITIS / BALANOPOSTHITIS என்கிறோம் தொடர்ந்து இந்தத் தொற்றின் விளைவாக முன் தோல் ஆண்குறியுடன் இருக ஒட்டிக் கொண்டு சிறுநீர்/ விந்து வெளியேறும் துவாரத்தைக் குறுகச் செய்யும். இதை ஃபைமோசிஸ் என்று அழைக்கிறோம். இவ்வாறு முன் தோல் இறுகிக் கொண்டால் முறையாக சிறுநீர் கழிக்க இயலாமலும் உடலுறவு கொள்ளும் போது அதிக வலியும் ஏற்படும்.

உராய்வு
உடலுறவு கொள்ளும் போது முன்னும் பின்னும் உராய்வு இருப்பதால் தொற்றுக்குள்ளான முன் தோலில் நீள வாட்டில் ( VERTICAL SLITS) வெடிப்பு தோன்றும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால் சர்க்கரை நோயைக் கண்டறிந்து அதை கட்டுக்குள் வைப்பது கூடவே பூஞ்சைத் தொற்றுக்கும் சிகிச்சை பெற்றால் குணமாகும். முறையான சர்க்கரை கண்ட்ரோல் செய்யாவிட்டால் முன் தோல் இறுகிக் கொண்டு அடிக்கடி தொற்று ஏற்பட்டு குணமாகும் போது தோல் பகுதி கடினமாகி விடும். இதற்கு விருத்த சேதனம் ( CIRCUMCISSION)செய்து முன் தோலை நீக்கும் சிகிச்சை செய்ய வேண்டும்.

விருத்த சேதனம்
ஏற்கனவே விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களுக்கு நீரிழிவு கட்டுப்பாடின்றி இருந்தாலும் முன் தோல் இல்லாமல் இருப்பதால் இந்த அறிகுறி தோன்றுவதில்லை. எனினும் நீரிழிவு அதீத கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்லும் போது ஆண் குறி மொட்டுப் பகுதியில் பூஞ்சைத் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. பெண்களைப் பொருத்தவரை அதீத ரத்த சர்க்கரையின் விளைவாக பெண் குறியான வெஜைனா மற்றும் வல்வா ஆகியவற்றில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு பெண் குறியை சுற்றி புண், அரிப்பு, நமிச்சல் ஏற்படும்.

பெண் நல மருத்துவர்
பெண்கள் நல மருத்துவர்களை சந்தித்து முறையான சிகிச்சை பெற வேண்டும். நீரிழிவு கண்டுபிடிக்கப்பட்டால் முறையாக அதை மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்படுத்திட வேண்டும். எரிச்சல் புண் இருப்பதால் உடலுறவில் நாட்டம் இருக்காது. அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு சொரிவதால் ஏற்படும் கீறல்களில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. கூடவே சிறுநீர் வெளியேறும் யூரித்ரா வழியாக தொற்று சிறுநீரகம் வரை பரவவும் வாய்ப்பு உண்டு. தொற்று யோனிப் பகுதியில் தொடர்ந்து இருப்பின் அதன் விளைவாக கர்ப்பப்பை பையிலும் கர்ப்ப பை குழாய்களிலும் தொற்றுப் பரவல் நடக்க வாய்ப்புண்டு.

குழந்தைகள்
எனவே எந்த வயதினராக இருப்பினும் சரியே ( குழந்தைகள் மற்றும் சிறு வயதினருக்கு வரும் டைப் ஒன்று நீரிழிவிலும் இந்த அறிகுறிகள் ஏற்படும்) ஆண்களுக்கு ஆண்குறியில் முன் தோலில் புண் ஏற்பட்டு வெள்ளை நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் ஆண் குறியின் மொட்டுப்பகுதியைச் சுற்றி சேருவதும் பெண்களில் அடிக்கடி பெண் குறிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் தயிர் போன்ற ஸ்திரத்தன்மை கொண்ட திரவத்துடன் அரிப்பு இருப்பின் கட்டாயம் ரத்த சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும்.

வெறும் வயிற்றில் சர்க்கரை
காலை வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை < 100 mg/dl க்குள் இருக்க வேண்டும். உணவு உட்கொண்டு இரண்டு மணிநேரம் கழித்து < 140 mg/dl க்குள் இருக்க வேண்டும் Hba1c எனும் மூன்று மாத சராசரி அளவுகள் பரிசோதிக்கப்பட்டு அது 5.5 க்குள் இருப்பின் நார்மல்
அதற்கு மேல் இருப்பின் நீரிழிவு தன்மை உள்ளது என்று அர்த்தம். மருத்துவரை அணுகி முறையாக நீரிழிவை கட்டுப்படுத்தும் வாழ்வியல் மாற்றங்களையும் மருத்துவ சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடும் இணையரில் ஒருவருக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டால் மற்றொருவருக்கும் பூஞ்சைக்கு எதிரான சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

நீண்ட நாள்
நீரிழிவு மிகவும் கட்டுக் கடங்காமல் நீண்ட நாள் இருக்கும் நோயர்களுக்கு அரிதாக இதே பூஞ்சை தொற்று - வாயிலும் உணவுக் குழாயிலும் ஏற்படலாம். இதை உணவுக்குழாய் பூஞ்சைத் தொற்று என்று அழைக்கிறோம் (Oesophageal candidiasis) ஆண் குறி மற்றும் பெண் குறியில் அடிக்கடி பூஞ்சைத் தொற்று ஏற்படுவது நீரிழிவின் அறிகுறி நண்பர்களே கவனம் தேவை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications