காலை உணவு ரொம்பவே முக்கியம்.. மிஸ் பண்ணாதீங்க.. உடலை ஆரோக்கியமாக வைக்க டிப்ஸ்!
பிரேக் பாஸ்டை ஏன் தவிர்க்கக் கூடாது என்பதை மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
சென்னை: பலரும் காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்வதால் காலை உணவையே சாப்பிடுவதில்லை. நேரடியாக மதிய உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். ஆனால், இது நமக்குப் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்களால் நமது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பல மணி நேரம் வேலை செய்வது நீண்ட கால நோக்கில் பல பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், இதைத் தவிர்க்க முடியாது என்பதால் மருத்துவர்கள் மோசமான பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய முறைகளைச் சொல்கிறார்கள். அதைப் பின்பற்றினாலே பாதிப்புகளை ஓரளவுக்குத் தடுக்கலாம்.

பிரேக் பாஸ்ட்
இங்குப் பலரும் காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்வதால் காலை உணவையே சாப்பிடுவதில்லை. நேரடியாக மதிய உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். வார நாட்களில் தான் இப்படி என்றால்.. வார இறுதியில் விடுமுறை என்பதால் எழுந்திருப்பதே 11 மணி என்றே இருக்கிறது. இதனால் அப்போதும் பலரும் காலை உணவைச் சாப்பிடுவதில்லை. முந்தைய நாள் டின்னர் சாப்பிட்டு, அதன் பிறகு சுமார் 14 முதல் 16 மணி நேரம் கழித்தே அடுத்த வேலை உணவைச் சாப்பிடுகிறார்கள்.

ஏன் முக்கியம்
இருப்பினும், சுகாதார வல்லுநர்கள் இதை ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அன்று நாள் முழுக்க நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். காலை உணவு என்பது பலவிதமான ஊட்டச் சத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் சரியான உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான காலை உணவு முக்கியமாகும். தூங்கும் போது, சுமார் 8-10 மணி நேரம் நாம் எந்தவிதமான உணவையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதால் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.

பாதிப்புகள்
நமது காலை சாப்பாடு எனர்ஜி தருவதாக இருக்க வேண்டும். காலை உணவைத் தவிர்ப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீண்ட கால வாழ்க்கை முறை நோய்கள் வராமல் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் ஆரோக்கியமான காலை உணவைச் சாப்பிட வேண்டும்.. காலை உணவைத் தொடர்ந்து சாப்பிடாமல் விட்டால்.. டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படும். அதேபோல காலை உணவைத் தவறாமல் சாப்பிட்டால்.. அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

இதய நோய்
காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் பருமனும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடை 30% வரை அதிகரிக்குமாம். உடல் பருமனே டைப் 2 நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஆரோக்கியமான காலை உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைவு. 25க்கு கீழ் இருப்பவர்களில் 27% பேருக்கு இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படக் காலை உணவைத் தவிர்ப்பதே முக்கியக் காரணமாக உள்ளது.

கேன்சரும் ஏற்படும்
காலை உணவை மிஸ் செய்யும் போது, அடுத்துச் சாப்பிடும் போது உணவை அதிகமாகச் சாப்பிடுவீர்கள். இது உடலில் கொழுப்பை அதிகரித்து.. பருமன் ஏற்படக் காரணமாக மாறுகிறது. காலை உணவைத் தவிர்ப்பது கேன்சர் ஆபத்துகளையும் அதிகரிக்கிறது. அதேபோல நமது பாசிட்டிவ் மூடையும் அது பாதிக்கிறது. காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுக்கு நினைவாற்றல் திறன் குறைவாகும் சோர்வு அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரி பிரேக் பாஸ்டில் என்ன மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதையும் பார்க்கலாம்.

என்ன சாப்பிடலாம்
காலை உணவு உடலுக்கு எனர்ஜி தருவதாக இருக்க வேண்டும். இட்லி, தோசை உணவுகளைச் சாப்பிடலாம். அத்துடன் காய்கறிகள், பழங்களையும் சாப்பிடலாம். அதேநேரம் காலையில் இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காலை உணவில் ஸ்நாக்ஸ், வறுத்த உணவுகள் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் பிரேக் பாஸ்டை சாப்பிட வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications