வாழை இலை வாழ வைக்கும்.. முந்திரி இலையின் முக்கியத்துவம்.. ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த 2 இலைகள் போதுமே
சென்னை: 2 இலைகள் இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வை எளிதாக பெறலாம் என்கிறார்கள்.. இந்த 2 இலைகளுமே மருத்துவத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.. ஒன்று வாழையிலை, மற்றொன்று முந்திரி இலை.. இவைகளின் பலன்கள் என்னென்ன தெரியுமா?
வாழையிலையில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு சத்துக்கள் உள்ளன... வைட்டமின் A, C, K சத்துக்கள் நிறைந்திருக்கின்றன..

வாழை இலையில் அத்தனையும் மருந்து
இவைகள் குடற்புண்களை ஆற்றக்கூடியவை.. ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கக்கூடியவை.. பீனால் ரத்தம் உறைவதைத் தடுக்கக்கூடியவை.. சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கக்கூடியவை. இவ்வளவு சத்துக்களும் அழிக்கும்.. வாழையிலையின் மேல் புறத்தில் குளோரோபில் என்ற பொருளில் அடங்கியிருப்பவையாகும்.
புற்றுநோய், இதயநோய்
சுடு சோற்றை வாழையிலையில் பரிமாறும்போது, அது வெந்துப்போய் இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலக்கின்றன.. இதனை நாம் சாப்பிடும்போது, இலையிலுள்ள அத்தனை சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றன.
இதனால் குடல் புண்கள் ஆறுகின்றன.. இளநரை தடுக்கப்படுகின்றன.. உடலின் செல் சிதைவு ஏற்படாமல் காக்கின்றன.. மன அழுத்தம், புற்றுநோய், இதய நோய்களும் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.. மருத்துவத்தில் வாழையிலை குளியல் முக்கியத்துவம் வாய்ந்தது.. இந்த குளியலால், உடல் எடை குறையும்.. உடல் வீக்கம், கை, கால் வீக்கம் நீங்கும்... நரம்பு மண்டலத்தை பலப்படும்.. சிறுநீரக செயலிழப்பு தடுக்கப்படும்..
வியக்க வைக்கும் முந்திரி இலைகள்
அதேபோல முந்திரி இலைகளையும் சொல்லலாம்.. முந்திரிகளை பொறுத்தவரை, இதயத்துக்கு நன்மை தரக்கூடியது.. குறைந்த கொழுப்பே இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒலிசிக் என்ற அமிலம், முந்திரியில் உள்ளதுதான் இதற்கு காரணம்.. நல்ல கொழுப்பு அதிகம் உள்ளதால், உடல் எடை ஏறாது..
அதிக அளவு மெக்னீஷியம் சத்து உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். எலும்பு தேய்மான பிரச்சனையையும் முந்திரி தீர்க்கும்.. காப்பர் சத்து அதிகமாக நிறைந்திருப்பால், தலைமுடிக்கு மிகவும் நல்லது... மூட்டு வலியும் எளிதில் நெருங்காது.
அதுபோலவே முந்திரி இலைகள், அதன் பட்டைகளிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.. முந்திரி இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, சர்க்கரை அளவை குறைக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, இந்த முந்திரி இலைகளில் அடங்கியுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. அதேபோல, பல் வலியால் அவதிப்படுபவர்கள், முந்திரியின் தளிர் இலைகளை மென்று தின்றால், நிவாரணம் பெறலாம்.. அதேபோல, வயிற்றுப்போக்கு, தலைவலிகளுக்கு முந்திரி இலை பயன்படுகிறது.
மரபணு குறைபாடுகள்
இந்த இலையிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், செல்களுக்கு பாதுகாப்பு தரக்கூடியவை.. இதிலுள்ள என்சைம்கள் செரிமானத்தை அதிகரிக்கக் கூடியவை.. மரபணு குறைபாடுகளை சீராக்கி உடலின் ஆரோக்கியத்தை காப்பதில், முந்திரி இலைகளுக்கு பெரும் பங்கு உள்ளது.
இத்தனை பயன்பாடும் உள்ளதால்தான், ஆயுர்வேத மருத்துவத்தில் முந்திரி இலைகள் மிகுந்த முககியத்துவம் பெற்றுள்ளன. ரத்த சுத்திகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தல், சிறுநீர்பாதை நோய்களுக்கு வழிகாட்டுதல் என அத்தனை பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது












Click it and Unblock the Notifications