தொப்புளில் தொற்று.. இதை மட்டும் 2 சொட்டு விட்டுப்பாருங்க.. தொப்புளை காக்கும் அதிசய எண்ணெய்.. பெஸ்ட்
சென்னை: தொப்புளில் உள்ள தொற்றுகள், அழுக்குகளை நீக்க ஏதாவது வழியிருக்கிறதா? தொப்புளில் எண்ணெய் வைத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?
பொதுவாக, நம்முடைய உடலில் ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளியும், தொப்புளில்தான் அமைந்துள்ளது.. கிட்டத்தட்ட எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது.
தொப்புள் ஆரோக்கியம்: இந்த தொப்புளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதை நம் முன்னோர்கள் அன்றே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு துளி எண்ணெய்யை தொப்புளில் வைப்பதால், ஏராளமான உடல் நோய்கள் குணமாகின்றன..

தூங்குவதற்கு முன்பு இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைக்க வேண்டும்.. பிறகு அந்த இடத்தில் லேசாக மசாஜ் செய்தால் போதும்.. இதனால், கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
வேப்ப எண்ணெய்: வேப்பெண்ணெய்யை தொப்புளில் வைத்தால் மிகவும் நன்மையாம்.. ஒரு துளி வேப்பெண்ணெயை தொப்புளில் வைத்தால், சரும வியாதிகளும் நீங்கும்.. தொற்றுக்களும் அண்டாது.. நச்சுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிமாகும்.. தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய்யை தடவி வந்தால், பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலி பறந்து விடும்.
தொப்புளில் கடுகு எண்ணையை விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம் சரியாகும். சருமம் வறட்சியிலிருந்தும் விடுபடலாம். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவைகளில் 2 சொட்டு தொப்புளில் விட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும் என்கிறார்கள்.. அதிலும், கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லதாம்..
பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய்யை தினமும் இரவில் தொப்புளில் வைத்து மசாஜ் செய்தால், 10 நாட்களில் முகம் மற்றும் சருமம் பளபளக்கும். முகம் இளமையாக மாறும், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
அதேபோல தொப்புளை எப்போதுமே அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.. அதிக வியர்வை காரணமாக தொப்புளில் எளிதில் பாக்டீரியா பூஞ்சை உருவாகிவிடும்.. இதற்கு வேப்பிலையை பேஸ்ட் போல அரைத்து தொப்புள் பகுதியில் தடவினால் தொற்றுக்கள் இருந்தாலும் குணமாகிவிடும்.. வேப்ப எண்ணெய்யையும் தொப்புளுக்கு பயன்படுத்தலாம்.
கல் உப்பு: தொப்புளில் அழுக்குகள் இருந்தால், அவை எளிதில் வெளியேறுவதில்லை.. இதற்கு கல் உப்பை நீரில் கரைத்து, சுற்றிலும் தடவி வந்தால் அழுக்குகளும் தொற்றுகளும் வெளியேறிவிடும்.. அதேபோல மஞ்சளை, நீரில் குழைத்து தொப்புளில் தடவினாலும் தொற்றுகளும், அழுக்குகளும் நீங்கும், மஞ்சள், வேப்பிலை, கல் உப்பு இவை எல்லாமே மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்..
இந்த லிஸ்ட்டில் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கொள்ளலாம். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை வெளிப்படுத்துவதால், தொப்புளில் இதனை வைத்துவரலாம்.












Click it and Unblock the Notifications