மாதவிடாய் வலி.. வெள்ளைப்பாடு தொல்லை.. கருணைக்கிழங்கு காட்டும் பூரண குணம்.. கிழங்கில் சிறந்தது கருணை
சென்னை: பெண்களை பாடாய் படுத்தும், வெள்ளைப்போக்கு மற்றும் அதிக உதிரப்போக்கு தொந்தரவுக்கு கருணைக்கிழங்கு சிறந்த மருந்தாகும் .. எப்படி தெரியுமா?
வள்ளலார் பரிந்துரைத்த கிழங்குகளில் மிகவும் அற்புதமான கிழங்கு கருணைக்கிழங்கு ஆகும்.. மூலநோய்க்கு அன்று முதல் இன்று வரை இந்த கருணையே சிறந்த மருந்தாக விளங்கி கொண்டிருக்கிறது.

மூலநோய்: காலையில் வெறும் வயிற்றில் கருணைக்கிழங்கு லேகியத்தை மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம்.. லேகியம் போன்று மருந்து வடிவில் உட்கொள்ளும்போது, டாக்டர்களின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.
அதிகம் காரம் சேர்க்காத கருணைக்கிழங்குடன் மோரையும் சேர்த்து சாப்பிடும்போது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்கிறார்கள்.. உடலிலுள்ள பித்தம் மற்றும் பித்தம் சம்பந்தப்பட்ட குறைகளை தணிக்கக்கூடியது இந்த கருணைக்கிழங்குகள். செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.
உதிரப்போக்கு: அதிகமான உதிரப்போக்கால் அவதிப்படும் பெண்களுக்கு கருணைக்கிழங்கு கை கொடுத்து உதவுகிறது.. ரத்தப்போக்கு உட்பட மாதவிடாய் சம்பந்தமான எல்லாவிதமான கோளாறுகளையும் கருணை சரி செய்கிறது..
குறிப்பாக, மாதவிலக்கு நேரங்களில் பெண்களுக்கு கை, கால் குடைச்சல்கள் அதிகமாக ஏற்படும். உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டு பலவீமான உணர்வு ஏற்படும். இதுபோன்ற தொந்தரவுகளை கருணைக்கிழங்கு போக்குகிறது.. உடலும், மனமும் சோர்ந்து போகாமல் இருப்பதில், கருணைக்கிழங்கு செய்யும் பயன்கள் ஏராளமாகும்.
ஹார்மோன் சிக்கல்: கருணைக்கிழங்கினை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இதில், ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் வெல்லம் சேர்த்து மாதவிடாய் முன்பு சாப்பிட்டுவந்தால், கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை நெருங்காமல் இருக்கும். பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகளைக்கூட இந்த கிழங்கு சரிசமமாக்கும்.
வெள்ளைப்படுதல் தொந்தரவு இருந்தாலும், கருணைக்கிழங்கினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். எனவேதான், இந்த கிழங்கின் மூலப்பொருளிலிருந்து, மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 40 வயதுக்கு மேலுள்ள பெண்கள் மெனோபாஸ் காலத்தின்போது, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்த இந்த கிழங்கு பேருதவி செய்கிறது.
பெண்கள்: பொதுவாக, உடலில் எடை கூடிவிடும் என்பதற்காக உணவிலிருந்து கிழங்குகளை பெரும்பாலானோர் தவிர்த்து விடுவார்கள்.. ஆனால், ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்த கருணைக்கிழங்கினை அப்படி ஒரேடியாக தவிர்த்துவிட முடியாது.
ஏனென்றால், எடையை குறைப்பதில் கருணை உதவுகிறது என்பதே ஆச்சரியமான தகவலாகும்.. குடலில் கிருமிகளை சேரவிடாமல் தடுத்து, கொழுப்புக்களையும் அதிகமாக சேர்ந்துவிடாமல் குறைக்கிறதாம் இந்த கருணைக்கிழங்குகள்.. ஆதனால்தான், "குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு" என்ற முன்னோர்கள் சொல்லி வத்திருக்கிறார்கள்..
உடல் எடை கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணைக்கிழங்கு தடுக்கக்கூடியது.. கழிவுகளும், நச்சுக்களும் வெளியேற்றக்கூடிய சிறந்த உணவாக திகழ்வதால், எடை குறைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக விளங்குகிறது. வாரம் 2 முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டாலே உடல் எடை குறைய துவங்குமாம். உடல் எடையால் ஏற்படக்கூடிய மூட்டுவலி பிரச்சனையையும் கருணை சரிசெய்துவிடுகிறதாம்.
புளி கரைசலில் கருணைக்கிழங்கை அரைமணி நேரம் ஊறவைத்து சமைத்தால், நமைச்சல் ஏற்படாது. அதேபோல, கருணைக்கிழங்கு நறுக்குவதற்கு முன்பு, கைகளில் சிறிது எண்ணெய்யை தடவிக்கொண்டாலும் நமைச்சல் ஏற்படாது. அல்லது அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைத்தாலும், நமைச்சல் ஏற்படாது..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications