முகம், கழுத்து கருமை நீங்கணுமா? ஆரஞ்சு தோல் பவுடர் போதுமே.. காபி தூள் இருக்கா? தக்காளி? செம ரிசல்ட்
சென்னை: முகம், கழுத்து பகுதிகளில் படிந்திருக்கும் கருமைகளை போக்க முடியுமா? வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தியே, பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் கருமையை நீக்க முடியுமா? ஆரஞ்சு பழத்தோல் தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வெயிலின் தாக்கம், சரியாக சருமத்தை பராமரிக்காதது போன்ற காரணங்களினால் பெண்கள் மற்றும் ஆண்கள் பல பேருக்கு முகத்தில் கருமை படர்ந்துவிடும்.. உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களினாலும் கழுத்து கருமையாக மாறிவிடுகிறது..

கருமை நிறம்: அதேபோல, திருமணமான பெண்கள் கழுத்தில் அதிக கனமுள்ள நகையை அணியும்போதும், இப்படி கருமை நிறம் கழுத்தில் தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் வீட்டிலுள்ள பொருளை பயன்படுத்தி பேக்குகள் பயன்படுத்தும்போது, இந்த கருமை மெல்ல மெல்ல நீங்க வாய்ப்புள்ளது.
அந்தவகையில், கற்றாழை பிரதானமாக இதற்கு உதவுகிறது. காரணம், கற்றாழைக்கு ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன.. அத்துடன், வைட்டமின் C உள்ளதால், சரும ஆரோக்கியத்தில் சிறப்பாக செயல்புரிகிறது. சருமத்தை ஒளிரச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு.
கற்றாழை: கற்றாழை ஜெல்லில், சிறிது சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவந்தால் கருமை நீங்குவதுடன், இறந்த சரும செல்களும் நீங்கிவிடும்.
கொண்டைக்கடலை மாவு, உளுந்து மாவு இரண்டையும் 2 ஸ்பூன் எடுத்து, சிறிது மஞ்சள், தயிர் சேர்த்து குழைத்து கழுத்தில் தடவவும்... 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணிரில் கழுவிவிட வேண்டும். வாரம் 2 முறை இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓட்ஸ்: அதேபோல, ஓட்ஸ் பயன்படுத்தியும் தீர்வு காணலாம்.. ஓட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, ஓட்ஸை அரைத்து அதில் சிறிது தக்காளி விழுது சேர்த்து, பேஸ்ட் போல கலந்து கழுத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதும். இதனால் கருமை நிறம் மெல்ல மெல்ல மாறும்.
தயிரில் சிறிது கோதுமை மாவு, மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல கலக்கி முகம், கழுத்தில் தேய்த்து மசாஜ் போல செய்யலாம்.. பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், கருமை நீங்கி, மெல்ல மாற்றம் தெரியும். ஒருவேளை கழுத்தில் பருக்கள் அல்லது வறட்சி இருந்தால் இந்த முறையை தவிர்த்துவிடலாம். ஏனென்றால், எரிச்சல் உண்டாகலாம்.
தக்காளி: பழுத்த தக்காளியை விழுதாக அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலக்க வேண்டும். இதனை கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து கழுவி வந்தாலும் பலன் கிடைக்கும்.
காபி தூளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கழுத்தின் கருமையை மாற்றக்கூடியது.. எனவே, காபி தூளில், சிறிது பன்னீர் கலந்து பேஸ்ட் போல குழைத்து கழுத்தில் தடவிவிட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் போதும். வாரம் ஒருமுறை இப்படி பேக் பயன்படுத்தினால், தடவலாம்.கருமை அண்டாது.
ஆரஞ்சு தோல்: வைட்டமின் C நிறைந்தது ஆரஞ்சு பழங்கள்.. இந்த ஆரஞ்சு தோலில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. ஆரஞ்சு தோல்களிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கழுத்து கருமையை ஏற்படுத்தும் டைரோசின் கலவைக்கு எதிராக போராடுகிறதாம்..
எனவே, ஆரஞ்சு பழத்தோல்களை கீழே போட்டுவிடாமல், அதனை காயவைத்து, பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரில் காய்ச்சாத பால் அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கழுத்தில் தடவ வேண்டும்.. 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், நாளடைவில் கருமை விலகிவிடும்.
கருவளையம்: இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழ இந்த தோல் உதவி புரிகிறது. பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தால், அதையும் இந்த ஆரஞ்சு பழ தோலை கொண்டே போக்கிவிடலாம். கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும், சருமத்தில் சுருக்கம் இருந்தாலும், எண்ணெய் பசை இல்லாமலும் இந்த பழத்தோல் காக்கிறது.
ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்து வந்தாலே, சருமம் ஆரோக்கியமாகும்.. அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்து வந்தால், பொலிவு கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications