பாடாய்ப்படுத்தும் இடுப்பு வலிக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு! தாய்ப்பால் பெருக தண்ணீர்விட்டான் கிழங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு அருமருந்தாக திகழும் தண்ணீர் விட்டான் கிழங்கு மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் தண்ணீர் விட்டான் கிழங்கை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஏன் தெரியுமா?

6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற மூலிகை.. ஊசிபோன்ற இலை, முட்கள் போன்ற தண்டுகள் காணப்படும். ஆனால், இதன் கிழங்கிலிருந்துதான் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

Wonderful Medicinal Uses of Thaneervittan Kilangu and Do you know how thaneervittan kilangu helps women

பிரச்சனைகள்: பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் விட்டான் மூலிகை பயன்படுகிறது என்றாலும், பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.. பருவமடைந்த பெண்கள், மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாக தோற்றமளிப்பார்கள்.. அவர்களுக்கு இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகளை தரும்போது, ஆரோக்கியம் அதிகரிக்குமாம்..

கர்ப்பிணிகளுக்கு தரப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல, உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதாகவும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்... இவை எல்லாவற்றையுமே தரக்கூடிய ஒரே மூலிகைதான் தண்ணீர்விட்டான் கிழங்கு.

கர்ப்ப காலம்: கர்ப்ப காலத்தில் தொடர்ந்து இந்த கிழங்கை பெண்கள் சாப்பிடும்போது, பிரசவம் எளிதாகும் என்பார்கள்.. முக்கியமாக, பனிக்குடத்தில் உள்ள தண்ணீர் குறையாமல் சுகப்பிரசவம் ஏற்பட இந்த கிழங்கு துணைபுரிவதாக ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டுமென்றால், நம்முடைய முன்னோர்கள் இந்த மூலிகையைதான் மருந்தாக கொடுப்பார்களாம்.

மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த, கை கொடுப்பது இந்த கிழங்குதான். ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதுடன், ஹார்மோன் செயல்பாடுகளின் சீரற்ற தன்மையை சீராக்குகிறது..

மூலிகை மருந்து: "மெனோபாஸ்" என்று சொல்லப்படும் மாதவிடாய் நிற்கும் நேரங்களில், பதட்டம், பயம், மன அழுத்தம் போன்றவைகள் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகளாகும். சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் உடலில் ஏற்படும். இந்த பிரச்சனைகளையும், தண்ணீர் விட்டான் மூலிகை தீர்க்கிறது.

சமீபகாலமாகவே, பிசிஓடி என்று சொல்லப்படும் கருப்பை கட்டிகள், இளம்பெண்களை அதிகமாகவே தாக்கி வருகிறது.. இதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருகும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. கர்ப்பப்பை கட்டிகளை இந்த மூலிகை கரைப்பதுடன், பெண்களின் கருத்தரிப்பு தன்மையையும் அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

டாக்டர்கள் ஆலோசனை: குளிர்ச்சியும், இனிப்பு சுவையும் நிறைந்த இந்த மூலிகை காய்ந்த நிலையிலேயே நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை, காயவைத்து இடித்து வைத்து பொடியாக்கியே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.

அல்லது ஷதாவரி பொடி அல்லது சூரணம் நாட்டு மருந்து, ஆயுர்வேத மெடிக்கல் ஷாப்களிலும் கிடைக்கிறது.. குழந்தை பெற்ற பெண்கள், இதை சூடான பாலில் அரை ஸ்பூன் கலந்து குடிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெறாமல் இதுபோன்ற மூலிகைகளை சாப்பிடக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+