கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜை… ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு போகும் அர்ச்சகர்கள்!
கேதார்நாத்: புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள்.
பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை.
எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. மலைப்பாதை சீரமைக்கப்படாத காரணத்தால் ஹெலிகாப்டர் மூலமாக 24 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலில் தங்கி பணியாற்றுகின்றனர்.
86 நாட்களுக்குப்பிறகு இன்று முறைப்படி பூஜைகள் தொடங்கியுள்ளன. கேதர்நாத்-பத்ரிநாத் குழுவினரின் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான்கு மணிநேரம் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி ஹன்ஸ்தேவாச்சாரிய சங்கராச்சாரியார் முன்னிலையில் பூஜைகள் நடைபெறுகின்றன. ‘இயற்கை பேரிடர் காரணமாக நீண்ட காலமாக பூஜைகள் நிறுத்தப்பட்டதற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கோருவோம்' என்று அவர் கூறியுள்ளார்.
இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் பரிகார பூஜைகளில் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுனா மற்றும் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கேதர்நாத் கோவிலில் பூஜை தொடங்கினாலும் கோவிலுக்கு செல்லும் பாதை இன்னும் சரி செய்யப்படாததால், கேதர்நாத் கோவிலுக்கு, இப்போதைக்கு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications