மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. 1,124 பணியிடங்கள்! 10 + டிரைவிங் லைசன்ஸ் போதும்.. அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 1,124 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய தொழிற்பாதுகாப்பு படை என அழைக்கப்படும் சி.ஐ.எஸ்.எப் நாட்டின் விமான நிலையங்கள், அணு மின் நிலையங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களிலும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த பாதுகாப்பு படையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
கான்ஸ்டபிள் டிரைவர் – 845
கான்ஸ்டபிள் (டிரைவர் - பம்ப் ஆபரேட்டர்)- 279
என மொத்தம் 1,124 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அத்துடன் டிரைவிங் லைசன்ஸ் அவசியம். கனரக வாகனம் அல்லது போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ், இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் உளிட்டவை வைத்து இருப்பது அவசியம். இந்திய குடிமக்கள் (ஆண்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வயது வரம்பை பொறுத்தவரை 21 முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருத்தல் அவசியம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் என்றால் 32 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?:
கான்ஸ்டபிள் டிரைவர்: ரூ. 21,700 – 69,100/
தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 03.02.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2025
தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துவிட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cisfrectt.cisf.gov.in/
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications