மத்திய அரசு வேலை! மாதம் 96 ஆயிரம் வரை சம்பளம்.. டிகிரி முடிச்சிருக்கீங்களா.. செம சான்ஸ்! ரெடியாகுங்க
சென்னை: மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனாகும். மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 170- பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
நிர்வாக அதிகாரிகள் (அக்கவுண்ட்ஸ்) (அளவு-I) - 50 பணியிடங்கள்
நிர்வாக அதிகாரிகள் (Generalists) (அளவு-I) - 120
கல்வி தகுதி: நிர்வாக அலுவலர் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பதவிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். நிர்வாக அலுவலர் Generalists- பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சிஏ (ICAI) / காஸ்ட் மேனேஜ்மண்ட் அக்கவுண்டண்ட் (ICWAI) / எம்பிஏ ஃபைனான்ஸ் / பிஜிடிஎம் பைனான்ஸ் / எம்.காம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 2 -1994 க்கு முன் பிறந்தவராகவும் செப்.1- 2003 க்கு பின் பிறந்தவராக இருக்க கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பு எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: பணியில் சேருபவர்களுக்கு ரூ. 50,925 - 96,765 - வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதன்மை தேர்வு, மெயின் தேர்வு (கொள்குறி & விரிவக எழுதுதல்) என இரண்டு கட்ட எழுத்து தேர்வுகள் நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதார்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100-ம், பிற பிரிவினருக்கு ரூ.850 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://www.newindia.co.in/- என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 29.09.2024 கடைசி நாள் ஆகும். முதல் கட்ட தேர்வு 13.10.2024- என்று நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு 17.11.2024- அன்று நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.newindia.co.in/recruitment/list
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications