டிஎன்எஸ்டிசியில் வேலை! 688 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களும் விண்ணப்பிக்கலாம்! நாளைதான் கடைசி நாள்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் 688 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவமனாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் உள்ளது. போக்குவரத்து கழகத்தின் பல்வேறு மண்டலங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படும்.

அதேபோல அப்ரெண்டீஸ் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 688 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காலிப்பணியிடங்கள் விவரம்:
இன்ஜினியரிங் பட்டதாரி பயிற்சி காலியிடங்களின் எண்ணிக்கை: 85
டி.என்.எஸ்.டி.சி, - மதுரை : 20
கும்பகோணம்: 35
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் - 30
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் / சிவில் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பட்டயப் பயிற்சி: (Technician (Diploma)
காலியிடங்களின் எண்ணிக்கை : 303
மதுரை: 51
கும்பகோணம்: 62
எம்.டி.சி சென்னை: 190
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் / சிவில் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000.
பட்டதாரி பயிற்சி:
காலியிடங்களின் எண்ணிக்கை: 300 (TNSTC - Kumbakonam)
கல்வி தகுதி: பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பயிற்சி கால அளவு: 1 வருடம்
விண்ணப்பிப்பது எப்படி?:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தேர்வு செய்து செய்து அப்ளே செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024 விண்ணப்பிக்க நாளை ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும். தேர்வு அறிவிப்பை படிக்க இந்த இணையதளத்தை http://boat-srp.com/wp-content/uploads/2024/06/TNSTC_Notification_2024_25_3_Regions.pdf பார்வையிடவும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications