சென்னை ஐசிஎப் -இல் 782 பணியிடங்கள்.. நாளை தான் கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை ஐசிஎப்பில் 782 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
இந்திய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னையில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 782 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணி விவரம்: கார்பென்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்எல்டி ரேடயோலாஜி, எம்எல்டி பாதோலாஜி உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் குறைந்தது 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு.
ஊதிய விவரம்: அப்ரென்டீஸ்(பயிற்சி) வகை பணியாகும். பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை எப்படி?: விண்ணப்பதாரர்கள் மெரீட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனினும், எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை கூடுதல் விபரங்களை https://pb.icf.gov.in/act/instructions.php அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications