சிக்கியதை எல்லாம்.. தூக்கி சாப்பிடும் ஏஐ புயல்.. ஒரேயடியாக 8000 ஊழியர்களை தூக்கிய ஐடி நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பெரும்பாலான வேலை நீக்கங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று நிறுவனத்தின் மனிதவள (HR) துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோமேஷன் காரணமாக.. அதாவது ஏஐ காரணமாக ஐபிஎம் 200 பணியாளர்களை தொடக்கத்தில் நீக்கியது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐகளிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அடிப்படையில், ஒரு காலத்தில் மனிதர்களால் கையாளப்பட்ட வேலையை இப்போது AI செய்வதால், பல பணிகள் மெதுவாக நீக்கப்படுகின்றன. மனிதர்களின் நேரடி , தினசரி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஐபிஎம் நிறுவனம் ஏஐ வைத்து மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஐபிஎம் சுமார் 200 எச். ஆர் பணியிடங்களை AI அமைப்புகள் மூலம் மாற்றியது. அதாவது எச். ஆர் பணிகளான பணிகளுக்கு தகவல் அனுப்புவது, பணியாளர்கள் தகவல்களை சேகரிப்பது, பணியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தல் அல்லது உள் ஆவணங்களை சோதனை செய்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய மென்பொருள் அமைப்பை அந்த நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது. இது எச். ஆர் செய்யும் எல்லா பணிகளையும் செய்துவிடும் என்பதால் எச். ஆர் ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் கோடிங், டெஸ்டிங் செய்யக்கூடிய பணியாளர்கள், அதிக சம்பளம் வாங்கும்.. உயர் மேனேஜர் பொறுப்பில் உள்ளவர்களும் நீக்கப்பட்டு உள்ளனர். வரும் நாட்களில் ஏஐ அமைப்புகளை அதிக அளவில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதாவது இப்போது உள்ள ஏஐ பயன்பாட்டை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் பணி இழப்பு
உலகம் எங்கும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில், பெரிய நிறுவனங்கள் ஏஐ வருகையை காரணம் காட்டி, ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. சமீபத்தில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் கடுமையான பணி இழப்புகள் நடந்து உள்ளன.
தாங்கள் உருவாக்கிய ஏஐ மூலமே.. வேலையை இழந்த மைக்ரோசாப்ட் பணியாளர்கள்.. ஐடி துறையே ஆடிப்போச்சுமேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர்களை கடுமையாக பாதித்துள்ளன. அதிலும் அவர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறி உள்ளது. அந்த நிறுவனம் AI-சார்ந்த கோடிங் முறைக்கு தற்போது தீவிரமாக மாறி வருகிறது.
மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் உலகளவில் சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாஷிங்டன்னில் மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணிநீக்கங்கள் நடந்து உள்ளன. முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக மாறி உள்ளதாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கோடிங் பணிகளை செய்யும் வகையில் சில ஏஐ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த ஏஐ கட்டமைப்புகள் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறிவிட்டது. அதாவது கோடிங் செய்பவர்கள், அதை டெஸ்டிங் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
400 பொறியாளர்களை மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் துணைத் தலைவரான ஜெஃப் ஹல்ஸ், தனது குழுவிடம் OpenAI மூலம் இயங்கும் சாட்பாட்களைப் பயன்படுத்தி கோடிங் செய்யப்படும் கூறி உள்ளாராம். அவர்களின் குறியீட்டில் 50 சதவீதம் வரை ஏஐ மூலம் உருவாக்க உத்தரவிட்டு உள்ளார். இது பொதுவான 20-30 சதவீத AI பங்களிப்பை அதிகம் ஆகும். இதனால் மீதம் உள்ள பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்களாம்.
ஏஐ செய்யும் கோடிங் நன்றாக இருந்த காரணத்தால்.. prombt கொடுக்க மட்டும் பொறியாளர்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளதாம் அந்த நிறுவனம். இப்படி பல ஆயிரம் பேர்களை அடுத்தடுத்து அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி வருகிறது. இந்த பொறியாளர்கள் தாங்கள் அறியாமலேயே தங்களின் சொந்த வேலை இழப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டார்கள்.
பணிநீக்கங்கள் ஜூனியர் பொறியாளர்களை மட்டும் குறி வைக்கவில்லை. எச்.ஆர் மேலாண்மை, தொழில்நுட்ப ப்ரொஜெக்ட் மேலாண்மைப் பணிகளில் உள்ள ஊழியர்களும், AI காரணமாக பணிகளை இழந்து உள்ளார்களாம். பிபிடி செய்து வந்தவர்கள், டேட்டா பணிகளை செய்து வந்தவர்களும் வேலைகளை இழந்து உள்ளார்களாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications