ரெடியா இருங்க! அரசு போக்குவரத்து கழகத்தில் 812 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணிக்கு 812 பேரை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், ஓட்டுநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் 812 பேரை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நேரடி முறையில் பணி நியமனம் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.

கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை , மதுரை போக்குவரத்து கழகங்களில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கும்ப கோணம் போக்குவரத்து மண்டலத்தில் 174 பேரும் சேலத்தில் 256 பேரும் கோவயில் 60 பேர், மதுரையில் 136 பேர், நெல்லையில் 188 பேர் என மொத்தம் 812 பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
ரிசர்வேஷனுக்கு தகுந்த படி தகுதியானவர்கள் நேரடி முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்பட்டு தேர்வு செய்யபடுவதற்கான நடைமுறைகள் தொடங்க உள்ளது. கல்வி தகுதியை பொருத்தவரை எஸ்.எஸ்.எல்.சி படித்து இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
கூடுதல் தகுதிகளாக கனரக வாகனம் ஓட்டுவதற்கான பேட்ஜ் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். 18 மாத அனுபவம் பெற்றிருப்பது அவசியம். அதேபோல் நடத்துனருக்கான லைசன்சும் வைத்து இருப்பது அவசியம். அரசு அங்கீகரித்த அமைப்புகள் மூலம் முதலுதவி பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். 160 செ.மீட்டர் உயரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 50 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். தெளிவான கண் பார்வை இருக்க வேண்டும்.டிரைவர் கம் கண்டக்டர் பணியிடங்களுக்கு ரூ.17,700 முதல் 56,200 வரை சம்பளமாக வழங்கப்படும். நேர்மயான முறையில் தேர்வு நடைமுறை இருக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications