ரிசர்வ் வங்கியில் வேலை.. கல்வி தகுதி என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. செக் பண்ணுங்க
சென்னை: ஆர்பிஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 94 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஆர்.பி.ஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு அமைப்பாக இயங்குகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. சென்னையிலும் கூட ரிசர்வ் வங்கியின் கிளை இயங்கி வருகிறது.

ரிசர்வ் வங்கியில் காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 94 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? போன்ற விவரங்களை பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
கிரேடு 'பி' (டிஆர்)- அதிகாரிகள் (பொது) - 66 பணியிடங்கள்
கிரேடு 'பி' (டிஆர்) - டிஇபிஆர் - 21
கிரேடு 'பி' (டிஆர்) - டிஎஸ்ஐஎம் - 07
என மொத்தம் 93 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். கிரேடு பி அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதும், 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை படிப்பு என்றால் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
கிரேடு பி DEPR - பணிக்கு பொருளியல் சார்ந்த படிப்புகள் முடித்து இருப்பது அவசியம். கிரேட் பி DSIM - பணிக்கு புள்ளியியல், கணித புள்ளியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தியானவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, ஜூலை 02. 1994 க்கு முன்பாகவோ ஜூலை 1. 2003-க்கு பிறகோ பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். இரண்டு தேர்வுகளுக்கு பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கணினி வழி தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்..10 ம் வகுப்பு தகுதி தான்.. நோ எக்ஸாம்! செம சான்ஸ் விட்றாதீங்க
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு 100 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்க வரும் 16.08.2024 கடைசி நாள் ஆகும்.
தேர்வுகள் நடைபெறும் தேதி:
* கிரேட் பி அதிகாரி: - முதல் கட்ட தேர்வு - செப்டம்பர் 08 ம் தேதி நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு - அக்டோபர் 19
* கிரெட் பி (டிஆர்) -DEPR அதிகாரி: முதல் கட்ட தேர்வு - செப்டம்பர் 14. இரண்டாம் கட்ட தேர்வு - அக்டோபர் 26
* கிரேட் பி (டி.ஆர் ) டிஎஸ்ஐ.எம் அதிகாரி: முதல் கட்ட தேர்வு - செப்டம்பர் 14. இரண்டாம் கட்ட தேர்வு - அக்டோபர் 26.
விண்ணப்பதார்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4470 கிளிக் செய்யவும்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஜூன் மாதம் பொறந்தாச்சு.. ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு.. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
இந்திய ரூபாய் நோட்டுகள் மொத்தமாக மாறப்போகுது! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! இனி கிழியவே கிழியாது -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications