நாமக்கல் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நவம்பர் 15 ஆம் தேதி முக்கியமான நாள்.. நோட் பண்ணுங்க
நாமக்கல்: வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அந்த வகையில், இந்த மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் நவம்பர் 15 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்துகொள்ளலாம்.
இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அனைத்து வித கல்வித் தகுதி உள்ளவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அனைத்து மனுதாரர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும்.
இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications