'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே'.. ரியல் ராக்கி பாய்.. பீடி சுற்றும் தொழிலாளி மகன் டூ டிஆர்டிஓ விஞ்ஞானி
கொல்கத்தா: கேஜிஎப் படத்தில் வருவது போல் ரியல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாயின் கடின உழைப்பு மற்றும் கனவை நிறைவேற்றும் விதமாக, ஐஐடியில் படித்த கொத்தனார் மகன், இன்று இந்திய அரசின் டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அவர் பெயர் தான் சுதீப்.
தோல்விகள் மற்றும் துன்பங்களை விட வேறு எதுவும் உங்களை வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு போகும் சக்தி இல்லை.. தோல்வி மற்றும் துன்பத்தை படிப்பனையாக கற்றவர்கள் அசாதாரணமான விஷயங்களைச் சாதிக்கும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்.

கடின உழைப்பு மற்றும் செய்யும் செயலில் எந்த நிலை வந்தாலும் உறுதியுடன் இருப்பது போன்றவை தான் வெற்றியாளர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்குகிறது. அப்படி நமக்கும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றை நாம் பார்க்க போகிறோம். சுதீப் மைதி என்பவர் தனது கனவுகளை ஜெயிக்க நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டார்.. ஆனால் அதனை எல்லாம் முறியடித்து சாதனையாளராகி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், பன்ஷ்குரா அருகே உள்ள புருஷோத்தம்பூர் கிராமத்திற்கு உள்பட்ட முகமது முராத் மைதி பாரா பகுதியைச் சேர்ந்த சுதீப்புக்கு சிறுவயதிலிருந்தே, சுதீப்புக்கு நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக சிறுவயதிலிருந்தே நம்பிக்கையுடன் படித்து திறமைகளை வளர்த்து வந்துள்ளார். சுதீப் ஆரம்பக் கல்வியை அதே கிராமத்தில் உள்ள துர்கா தொடக்கப் பள்ளியில் பயின்றார். பக்கத்து ஊரிலேயே பாலிடெக்னிக் படிப்பை முடித்த சுதீப், குவஹாத்தி ஐஐடியில் பி.டெக் பட்டம் மற்றும் எம்.டெக் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்..
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சுதீப்பின் தந்தை கோவிந்த மைதி கொத்தனாராக வேலை செய்தார். அவர் மகனை படிக்க வைக்க கடுமையாக போராடினார். கோவிந்த பாபு கொத்தனார் வேலை செய்து பல வீடுகளை கட்டிய போதிலும், வறுமை காரணமாக சொந்த வீடு கட்ட முடியவில்லை.
சுதீப் படித்துக் கொண்டிருக்கும் போதே, அவரது தந்தை சாலை விபத்தில் சிக்கினார், அதன் காரணமாக படிக்க முடியாத நிலை சுதீப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. இக்கட்டான நிலையில் சுதீப்பின் தாய் பீடிகளை சுருட்டி விற்று தன் குழந்தைகளை படிக்க வைத்தார். தனது இரண்டு மகள்களை திருமணம் செய்து வைத்த சுதீப்பின் தாய், தனது மகனை தொடர்ந்து படிக்க வைத்தார்.
அதனால் படித்து முடித்த சுதீப், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரது ஆர்வமும் உறுதியும் அவருக்கு நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications