நேர்க்காணல் மட்டுமே.. மாதம் ரூ.43,000 சம்பளம்.. அழைக்கும் ஆவின் நிறுவனம்.. சூப்பர் வாய்ப்பு.. தயாரா?
சிவகங்கை: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட்(கால்நடை ஆலோசகர்) 7 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc.,& A) முடித்திருப்பதோடு, கம்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் டூவீலர் ஓட்ட தெரிந்து லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

இருப்பினும் இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Indiviual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் நேரடியாக வரும் 29ம் தேதி நடக்கும் காலை 11 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும். மார்ச் 29 நேர்க்காணலில் பங்கேற்க விரும்புவோர் Aavin Dairy, ‛O' Siruvayal Road, Kalanivasal, Karaikudi, Sivagagai District 630 002 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications