Accenture வேலைவாய்ப்பு.. சென்னை - கோவையில் பணி நியமன வாய்ப்பு.. அசத்தல் சம்பளம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் கைநிறைய சம்பளத்துடன் புதிய பணியிடம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சர் (Accenture) இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 இடங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது.

அதன்படி தலைநகர் சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனம் செயல்படுகிறது. இதுதவிர வெளிமாநிலங்களிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதாவது ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் (System and Application Services Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி, பிசிஏ, பிபிஏ, பிஏ, பிகாம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதுதவிர சம்பந்தப்பட்ட பணிக்கு 0-11 மாதம் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்க முடியும். இதுதவிர முக்கியமான கண்டிஷன் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கடந்த 3 மாதத்தில் ஆக்சென்ச்சரின் பிற இன்டர்வியூக்களில் பங்கேற்று இருக்க கூடாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 44, 200 வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், குர்கிராம், புனே, கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications