நோ எக்ஸாம்! மாதசம்பளம் ரூ.50,000 டூ ரூ.70,000.. மத்திய அரசு நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு
சென்னை: மத்திய அரசின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (Aeronautical Development Agency) செயல்பட்டு வருகிறது. இந்த ஏஜென்சியில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் தற்போது ப்ராஜெக்ட் என்ஜினியர் பணியில் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி ப்ராஜெக்ட் என்ஜினியர் I பணிக்கு 40 பேர், ப்ராஜெக்ட் என்ஜினியர் II பணிக்கு 9 பேர், ப்ராஜெக்ட் என்ஜினியர் III பேர் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிகளுக்கு விண்ணப்ம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல் என்ஜினியர், இன்டஸ்ட்ரியல் ப்ரோடக்சன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயதும், அதிகபட்சம் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பணி வாரியாக பார்த்தால் ப்ராஜெக்ட் என்ஜினியர் I பணிக்கு 35 வயதுக்குள் உட்பட்டவர்களும், ப்ராஜெக்ட் என்ஜினியர் II பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், ப்ராஜெக்ட் என்ஜினியர் III பணிக்கு 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் விண்ணப்பம் செய்ய வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பத 08.10.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சம் என்றால் ரூ.70ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். ப்ராஜெக்ட் என்ஜினியர் I பணிக்கு ரூ.50 ஆயிரம், ப்ராஜெக்ட் என்ஜினியர் II பணிக்கு ரூ.60 ஆயிரம், ப்ராஜெக்ட் என்ஜினியர் III பணிக்கு ரூ.70 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ada.gov.in இணையதளம் மூலம் செப்டம்பர் மாதம் 8 ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications