டிகிரி போதும்.. அமேசான் தரும் அசத்தலான வேலை.. சென்னை, பெங்களூரில் பணியாற்ற சான்ஸ்!
சென்னை: பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள அமேசானின் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், டெல்லி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் சாட்வேர் டெவ் இன்ஜினியர் I (Software Dev Engineer I) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாக அமையும்.
இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு என்று தனி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி Agile environment-ல் பணியாற்றி ஹை குவாலிட்டி சாப்ட்வேர் டெலிவர் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதோடு புதுமையான டெக்னாலஜிக்கான டிசைனை புதுமையாக செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி ஹைதராபாத், சென்னை, பெங்களூர், டெல்லி, புனே உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications