30,000 பேர் இன்று முதல் பணி நீக்கம்.. திடீரென அறிவித்த அமேசான் நிறுவனம்.. ஊழியர்கள் கவலை
வாஷிங்டன்: பிரபல நிறுவனமான அமேசான் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்க உள்ளது. இதனால் அமேசானில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர். இந்த பணி நீக்க நடவடிக்கையின் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கி வருகிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் தான் ஊழியர்கள் கொத்து கொத்தாக பணி நீக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள நிறுவனம் தான் அமேசான். உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.
அமேசான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தகவல் தொடர்பு, பாஸ்காஸ்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் குறைந்த அளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று முதல் அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
உலகம் முழுவதும் அமேசானில் தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 30,000 ஊழியர்கள் என்பது அந்த நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும். மேலும் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதனை ஒப்பிடும்போது தற்போதைய பணி நீக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இந்த பணி நீக்க நடவடிக்கையின் பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது கொரோனா காலத்தில்அமேசானில் அதிகப்படியான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இப்போது நிறுவனத்தின் செலவை குறைத்து மறுகட்டமைப்பு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications