வேலை வாய்ப்பு அதிகாரியாகணுமா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ எழுதுங்க! விண்ணப்பிக்க இன்றே கடைசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மைக்ரோசாப்ட் இயங்கு தளம் செயலிழந்ததால் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கால அவகாசம்

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு தேர்வாணையம் என்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களை பணியமர்த்தி வருகிறது. விஏஓ முதல் உயர் பதவி வரை அனைத்துக்கும் இந்த ஆணையம் தேர்வு நடத்துகிறது.

tnpsc jobs job


அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி 2, 2 ஏ முதல் நிலைத் தேர்வுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.

அது போல் முழு நேர விடுதிக் காப்பாளர், தணிக்கை ஆய்வாளர், நிதி தணிக்கைத் துறை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2 ஏ பிரிவின் கீழ் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அந்த பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த குரூப் 2, 2 ஏ பணிகளுக்கு அறிவிக்கையானது கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2 வில் 507 பணியிடங்களுக்கும் குரூப் 2 ஏவில் 1820 பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 14ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை 3 மணிநேரம் நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று இரவு 11.59 மணியுடன் கடைசி நாள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. ஆனால் நேற்று மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் உலகம் எங்கும் பிரச்சினை ஏற்பட்டு செயலிழந்ததால் விமான சேவை, வங்கி சேவை, மருத்துவ சேவை, அமேசான் சேவை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இதனால் பணம் செலுத்துவதில் சிக்கல் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இன்று ஒரு நாள் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+