டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு தேர்வு எழுதுறீங்களா? இந்த வருஷமே எழுதிடுங்க.. அடுத்த வருஷம் பெரிய சிக்கல்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)
வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் தேர்வுகளை முடிந்த அளவு சிறப்பாக எழுத வேண்டும் என்று இந்த துறை வல்லுனர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தலுக்கு முன்பு வரை பெரிதாக தேர்வுகள் நடக்காது. தேர்தலுக்கு பின் தேர்வுகள் நடக்கவும் காலம் எடுக்கும். அரசு மாறினாலும், மாறவில்லை என்றாலும் புதிதாக வரும் அரசு.. அதிகாரிகள் மாற்றம், அமைச்சரவை மாற்றத்தில் பிசியாக இருக்கும்.
இதனால் அடுத்த வருடம் ஒன்று இரண்டு தேர்வுகள் நடந்தாலே அது வியப்பான விஷயம்தான். இதனால் இந்த வருடமே தேர்வுகளை எழுதுவதே சரியாக இருக்கும் என்று இந்த துறை வல்லுனர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை தேர்வாணையம் சார்பாக வெளியிட்டு உள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பின்வரும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது:
1. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
2. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
4. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு: இது போக குரூப்-4 பதவிக்கான காலிப் பணியிடங்களை 8,9325 அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான்
டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கிறது. 2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086-2) நிரப்பப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications