"இன்போசிஸ் நாராயண மூர்த்தி கண்ணில் படும் வரை".. ஆஸ்திரேலியா கொண்டு வரும் சூப்பர் சட்டம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: வேலை நேரத்திற்கு பின் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செய்தியை இன்போசிஸ் நாராயணமூர்த்தி கண்ணில் படும் வரை ஷேர் செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலை நேரத்திற்கு பின் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை அளிக்கும் அந்த மசோதாவை ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

Australia has introduced a law that allows employees to ignore work calls after duty hours

ஏற்கனவே வேலையில் பயன்படுத்தும் மொபைலை பணி முடிந்ததும், தொழிலாளர்கள் ஸ்விட்ச் ஆப் செய்து கொள்ளும் உரிமை வழங்கும் சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

வேலை நேரம் முடிந்தாலும், நிறுவனங்கள் தொடர்ந்து வேலை வாங்குவது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தொடர்கிறது. குறிப்பாக உடல் உழைப்பு தொழிலாளர்கள், அடிமட்ட தொழிலாளர்கள் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வேலை முடிந்து வீட்டிற்கு சென்றாலும் போனில் அழைத்து பல கேள்விகள் கேட்பது, அதை செய்தாயா, இதை செய்தாயா என்று கேட்பது, நாளை வேலை குறித்து மீட்டிங் போடுவது என அவர்கள் வீட்டுக்கு போன பின்னரும் விடாமல் டார்ச்சர் செய்வது நடக்கிறது.

இதற்கு மேற்கத்திய நாடுகள் படிப்படியாக முற்றுப்புள்ளி வைத்து வருகின்றன. வேலை நேரத்திற்கு பின் முதலாளி மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை அளிக்கும் வசதி மேற்கத்திய நாடுகளில் இருக்கிறது. அந்த வகையில் இந்த உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது வேலை செய்யாத நேரங்களில் தங்களுடை நிறுவனங்களின் மேலாளர்கள், சூப்பர்வைசர்கள், முதலாளிகளின் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை புறக்கணிக்கும் சுதந்திரத்தை ஊழியர்களுக்கு வழங்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டுவர உள்ளது. இந்தக் கொள்கையை மீறும் முதலாளிகளுக்கு இனி ஆஸ்திரேலியாவில் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் , தொழில்துறை உறவுகள் தொடர்பான சட்டங்களில் ஆஸ்திரேலியா அரசு பல மாற்றங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவை ஆளும் மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் வேலைவாய்ப்பு அமைச்சர் டோனி பர்க் இந்த தகவலை தெரிவித்தார். இந்த சட்டத்திற்கு பெரும்பான்மையான செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஏற்பாடு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்வதைத் தடுக்கும் என்றும், இதன் மூலம் நியாமற்ற முறையில் அழைக்கும் முதலாளிகளின் அழைப்பை துண்டிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் டோனி பர்க் கூறினார். இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவில் தற்காலிக வேலையிலிருந்து நிரந்தர வேலைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் டிரக் ஓட்டுனர்களுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் உள்பட பல்வேறு நிலைகளை ஆஸ்திரேலிய அரசு மாற்றுகிறது. அதேநேரம் ஆஸ்திரேலியாவில் உள்ள சில அரசியல்வாதிகள், நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளோ, நிறுவனங்களின் இணைப்பைத் துண்டிக்கும் உரிமை தரும் சட்டத்தை இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று விமர்சித்துள்ளனர். வேலை குறித்த அக்கறையை குறைக்கும் என்றும் போட்டித்தன்மையை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஆறு வாரங்கள் ஊதியமின்றி கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதை தடுக்கவே இந்த சட்டம் வந்துள்ளது. இந்த சட்டத்தை பாராட்டியுள்ள நெட்டிசன்கள் பலர், இன்போசிஸ் நாராயண மூர்த்தி கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். இன்போசிஸ் நாராயண மூர்த்தி கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் கூறும் போது, ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+