தமிழ் தெரிஞ்சவங்களுக்கே முன்னுரிமை.. மாதம் 85 ஆயிரம் சம்பளம்! பொதுத்துறை வங்கியில் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 2,500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத்தை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் முக்கிய நகரங்களில் இந்த வங்கியின் கிளைகள் அமைந்துள்ளன.

job Employment chennai

பணியிடங்கள் விவரம்:

பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு வேலை தேடும் பட்டதாரிகள் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் தேர்வர்களை கனவை நனவாக்க கூடிய வகையில் ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பினை பேங்க அப் பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

லோக்கல் பேங்க் ஆபிசர் 2,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநில வாரியாக காலிப்பணியிடங்க்ள் விவரம் வெளியாகியுள்ளன. அந்த வகையில், குஜராத் -1,160, கர்நாடகா - 450. கேரளா - 50, மகாராஷ்டிரா - 485. தமிழ்நாடு - 60, மேற்கு வங்கம் -50 என 14 மாநிலங்களில் காலியாக உள்ள 2,500 பணியிடங்கள் நிரபபடுகின்றன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் என்பதால் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பணியிடம் என்றால் தமிழ் தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயதுக்க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் 33 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளத்தை பொறுத்தவரை ரூ.48,480 - 85,920/- வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படியில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள் தமிழகத்தில் பின்வரும் நகரங்களில் அமைக்கப்படும். சென்னை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், கடலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஆங்கில அறிவு, வங்கிகள் பற்றிய அடிப்படை அறிவு, பொது அறிவு / பொருளாதார விவகாரங்கள், ரீசனிங்& அப்டிடியூட் என 4 வகையான பிரிவுகளில் தலா 30 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிபடையில் மொத்தம் 120 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள்ளூர் மொழித்திறன் தேர்வு நடைபெறும். இதில் தோல்வி அடைந்தால் நேர்முகத்தேர்வில் பங்கேற்க முடியாது. எனினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழிப்பாடத்தை எடுத்து படித்தவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.

விண்ணப்ப கட்டணம்:

ஆர்வம் உள்ள விண்ணப்பாதரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+