பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. தேர்வு கிடையாது.. 1.35 லட்சம் சம்பளம்.. தேதி முடிய போகுது!
சென்னை: பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜூனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்பட மொத்தம் 1,267 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பேங்க் ஆப் பரோடா வங்கி. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஜூனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்பட மொத்தம் 1,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பன போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
வேளாண் சந்தைப்படுத்தல் அதிகாரி - 150
விவசாய சந்தைப்படுத்தல் மேலாளர் - 50
மேலாளர் - விற்பனை - கிரேடு/ஸ்கேல் II - 450
மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் பிரிவு - கிரேடு/ஸ்கேல் II - 78
மூத்த மேலாளர் - கடன் ஆய்வாளர் - தரம்/அளவு III - 46
மூத்த மேலாளர் - MSME உறவு - தரம்/அளவு III - 205
தலைவர் - SME பிரிவு - கிரேடு / ஸ்கேல் IV - 12 என மொத்தம் 61 வகையான பணியிடங்களில் 1267- சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வித் தகுதியானது மாறுபாடும். துறை சார்ந்த பிரிவில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 24 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: ஜூனியர் மேனேஜர் அளவிலான பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 48,480 முதல் 85,920/- வரையும், மிடில் லெவல் பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 85,920 முதல் 1,05,280/-வரையும், சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 1,20,940 முதல் 1,35,020/- வரையும் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ 600 ஆகும். எஸ் சி மற்றும் எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாளாகும். எனவே தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை செய்யவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-12/Advertisement-Regular-27-12-2024-26-20.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications