பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை.. டிகிரி + தமிழ் தெரியுமா? உடனே அப்ளை பண்ணுங்க.. ப்ரஷர்களுக்கு சான்ஸ்!
சென்னை: பேங்க் ஆப் பரோடாவில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 233 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி உள்பட 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. நாடு முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் எஸ்.பி.ஐ தவிர்த்து பிற வங்கிகள் பெரும்பாலான பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனியாக தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. இது போக வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள், அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் என பல்வேறு பணியிடங்களை அந்த வங்கிகள் உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகிறது.

வங்கி பணிகளை பொறுத்தவரை கை நிறைய சம்பளம் + சலுகை உள்ளிட்டவை கிடைக்கும் என்பதால் வேலை தேடும் இளைஞர்கள் பலருக்கும் வங்கி பணிகளில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. பேங்க ஆஃப் பரோடாவில் தற்போது 4 ஆயிரம் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க யார் யார்? தகுதி பெற்றவர்கள் என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: மொத்தம் 4,000 பயிற்சி பணியிடங்கள் ( Apprentice Posts)நிரப்பப்படுகின்றன. மாநிலம் வாரியாக பயிற்சி பணியிடங்கள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 223 பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 89, கர்நாடகாவில் 537, புதுவை 10, மகாராஷ்டிரா 388 என 27 மாநிலங்களிலும் சேர்த்து 4 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி& வயது வரம்பு: பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 01.02.2025 தேதிப்படி 4 ஆண்டுகளுக்கு முன்பாக டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 33 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 31 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நகர்புறம் மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள வங்கி கிளைகள் என்றால் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஊரகப்பகுதிகள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள வங்கிகள் என்றால் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட் (ஆப்ஜெக்டிவ் டைப்) , உள்ளூர் மொழித்திறன் தேர்வு & மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழித்திறனை பொறுத்தவரை எந்தெந்த மாநிலங்களுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழி நன்கு தெரிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பணியிடத்திற்கு தமிழ் தெரிந்து இருப்பது கட்டாயம்.
ஆன்லைன் டெஸ்ட் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல்,சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர்,வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை நன்கு ஒருமுறை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்னப்ப கட்டணம் ரூ.800 ஆகும். பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 11.03.2025. கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-02/Advertisement-Apprenticeship-18-36.pdf












Click it and Unblock the Notifications