உள்ளூரிலேயே அரசு வங்கியில் வேலை பார்க்க சான்ஸ்! டிகிரி முடிச்சிருக்கீங்களா? உடனே விண்ணப்பிங்க
சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 2,500 உள்ளூர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 86 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. மத்திய அரசின் பொதுத்துறை வங்கியாக உள்ள பேங்க் ஆப் பரோடாவின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பல ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாகவும் நேரடியாக வங்கியே தேர்வு நடத்தியும் நிரப்பி வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் தற்போது 2,500 உள்ளூர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை பார்க்கலாம்.
லோக்கல் ஆஃபிசர் (உள்ளூர் அதிகாரி) - 2,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநில வாரியாக பார்த்தால் தமிழ்நாடு - 60, கேரளா - 50, கர்நாடகா - 450, மகாராஷ்டிரா - 485, குஜராத் - 1,160 , ஒடிசா - 60 என 18 மாநிலங்களில் 2,500 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை தேர்வர்கள் 01.7.2025 தேதிப்படி 21 வயது நிறைவடைந்தவர்களாகவும் 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால்35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் & கல்வி தகுதி:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 48,480 - 85,920/- வரை சம்பளம் வழங்கப்படும். கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். சார்ட்டடு அக்கவுண்ட், காஸ்ட் அக்கவுண்ட், என்ஜினியரிங் அல்லது மெடிக்கல் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தமிழ் தெரிந்தவர்கள்
வணிக வங்கி அல்லது ஏதாவது பிராந்திய வங்கி அதாவது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி, நிதி நிறுவனங்கள், சிறிய நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பணி அனுபவம் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 60 பணியிடங்களுக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ரீசனிங் வங்கி சார்ந்த விஷயங்கள், ஆங்கில அறிவு தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவை இடம் தேர்வில் இடம் பெற்று இருக்கும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் செலுத்தினால் போதும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் முதல் 12 ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கும் மாநிலத்தில் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள். அதன் பிறகு SMGS-IV Grade க்கு பதவி உயர்வு பெற்றால் இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு வங்கி கிளைக்கு மாற்றப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2025 ஆகும். தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பின்னர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-07/Advertisement-30-31.pdf












Click it and Unblock the Notifications