மத்திய அரசு நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைகள்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய அரசு நிறுவனமான பிரம்மபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் எனப்படும் பிசிபிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் பிசிபிஎல் எனப்படும் பிரம்மபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட். அசாமை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் பாலிமர் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த பிசிபிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 36
பணி வாரியாக
துணை பொது மேலாளர் - 02 பணியிடங்கள்
தலைமை மேலாளர் - 01 பணியிடங்கள்
சீனியர் மேலாளர் - 05 பணியிடங்கள்
மேலாளர் - 03 பணியிடங்கள்
துணை மேலாளர் - 25 பணியிடங்கள்
சம்பளம்: ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாகத் துணை பொது மேலாளர் பணியிடத்திற்கு ரூ 66 ஆயிரம் வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணியிடத்திற்கும் அதற்கென தனியாகக் கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காலியிடங்களுக்கு பிஇ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதிகபட்ச வயது வரம்பு
துணை பொது மேலாளர் - 51 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
தலைமை மேலாளர் - 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
சீனியர் மேலாளர் - 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலாளர் - 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
துணை மேலாளர் - 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி - ஜனவரி 2, 2022
கூடுதல் தகவல்களுக்கு https://bcplonline.co.in/UploadFiles/CareerUploadFiles/56_37_Detailed%20Advt.%20No.%20BCPL-29%202021.pdf
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க
https://www.bcplonline.co.in/
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications