கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தலான வேலை.. அழைக்கும் பிஇசிஐஎல்
சென்னை: மத்திய அரசின் பிஇசிஐஎல் எனும் பொதுத்துறை நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்ஸ் மற்றும் எம்டிஎஸ் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Broadcast Engineering Consultants India Limited அல்லது BECIL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிஇசிஐஎல் நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தான் அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: பிஇசிஐஎல் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்து கம்ப்யூட்டரை நன்கு இயக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருப்பதோடு எக்எல்லில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
எம்டிஎஸ் பணி: எம்டிஎஸ் (அன் ஸ்கில்ட்) பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் எம்டிஎஸ் பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்பது வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.81,000 வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவரா நீங்கள்.. தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை
வயது வரம்பு - மாதசம்பளம்: டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,082 சம்பளமாக வழங்கப்படும். எம்டிஎஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.17,494 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.becil.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி மாதம் 7ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக பொது, ஓபிசி, பெண்கள், முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.885 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ரூ.531 கட்டணமாக உள்ளது.
தேர்வு செய்வது எப்படி: இப்படி விண்ணப்பம் செய்வோர் திறனறி தேர்வு (Skil Tests), நேர்க்காணல் மற்றும் கலந்துரையாடல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் [email protected] என்ற இ-மெயில் முகவரி அல்லது 0120 - 4177860 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications