சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் வேலை.. அறநிலையத்துறை தந்த சான்ஸ்.. 8 ஆம் வகுப்பு தகுதியே.. 48,000 சம்பளம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரில் இருக்க கூடிய இந்த கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கை நிறைய சம்பளம் + சலுகை கொண்ட இந்த வேலை குறித்த விவரங்களளை இங்கே பார்க்கலாம்.

பக்த ஆஞ்சநேயர் கோயில்
சென்னை நங்கநல்லூரில் பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்தக் கோயிலில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறநிலையத்தூறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எழுத்துதேர்வு எதுவும் இன்றி நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* டைப்பிஸ்ட் - 01 பதவி
* பிளம்பர் - 01 பதவி
* அலுவலக உதவியாளர் - 01 பதவி
* மின்சாரப் பணியாளர் - 01 பதவி
கல்வித் தகுதி:
* டைப்பிஸ்ட் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முது நிலை அல்லது இளநிலை டைப்பிங் முடித்து இருக்க வேண்டும்.
* பிளம்பர் பணிக்கு பிளம்பர் பாடப்பிரிவில் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் வழங்கிய தொழில் பயிற்சி நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்று இருக்க வேண்டும்.
* மின் பணியாளர் பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து மின்வாரிய தொழில் துறை பயிற்சி (ஐடிஐ) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அறநிலையத்துறை இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
* தட்டச்சர் - ரூ.15,300 - 48,700/-
* பிளம்பர் - ரூ.12,600 - 39,900/-
* அலுவலக உதவியாளர் - ரூ.12,600 - 39,900/-
* மின் பணியாளர் - ரூ.12,600 - 39,900/-
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் வழியாகவோ நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Executive Officer,
Arulmigu Adhivyadhihara Bhaktha Anjaneyar Temple,
Nanganallur,
Chennai - 600061.
* வின்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 18.12.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள் 05.45 PM ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications