ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்.. கேசியர் உள்பட 4 பிரிவுகளில் சூப்பர் வேலை.. அழைக்கும் எய்ம்ஸ்.. தயாரா?
சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனையில் கேசியர், வார்டன், நர்சிங் ஆபிசர் உள்பட 4 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.1.51 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது பிலாஸ்பூரில் அமைந்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன் விபரம் வருமாறு:
சீனியர் நர்சிங் ஆபிசர்: இந்த பணிக்கு 45 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 4 ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்து 3 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மெடிக்கல் சோசியல் வொர்க்கர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பதோடு எம்ஏ சோசியல் வொர்க் அல்லது மெடிக்கல் சோசியல் வொர்க் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.44,900 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.
விடுதி காப்பாளர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் 30 முதல் 45 வயதுக்குள் இருப்பதோடு டிகிரி அல்லது டிப்ளேமா பிரிவில் ஹவுஸ் கீப்பிங், மெட்டிரீயல் மேனேஜ்மென்ட், பப்ளிக் ரிலேஷன்ஸ், எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும்.
கேசியர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: மேலும் வயது வரம்பை பொறுத்தமட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் www.pgimer.edu.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Exam, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications