எழுத்து தேர்வு கிடையாது.. மாதசம்பளம் ரூ.90,000.. கேபினட் செயலகத்தில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: மத்திய அரசின் கேபினட் செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அதிகாரிகள் (Deputy Field Officers) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு எழுத்து தேர்வின்றி நேர்க்காணல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கேபினட் செயலகம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இங்கு டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள துணை கள அதிகாரிகள் (Deputy Field Officers) பணிக்கு 125 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு 50 பேர், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு 45 பேர், சிவில், எலக்ட்ரிக்கல், கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவுக்கு தலா 2 பேர், பிசிக்ஸ் பிரிவுக்கு 5 பேர், கெமிஸ்ட்ரி பிரிவுக்கு 3 பேர், மைக்ரோபயாலஜி பிரிவுக்கு ஒருவர் என மொத்தம் 125 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி, ஓபிசி, மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட துறையில் என்ஜினியரிங் அல்லது டெக்லானஜி அல்லது மாஸ்டர் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் மற்றும் பிற அலோவன்ஸ் சேர்த்து மாதம் ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெல்லி தவிர பிற இடங்களிலும் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சுயஒப்பமிட்டு தபாலில் ‛Post Bag No.001, Lodhi Road Head Post Office, New Delhi - 110003 என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 6ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கேட் (GATE) மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications