Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனரா வங்கியில் 3,000 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை பார்க்கலாம்.. டிகிரி முடித்தால் அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,000 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னையில் 30 பணியிடங்களும், மதுரையில் 21 பணியிடங்களும், கோவையில் 27 பணியிடங்களும் என தமிழகம் முழுவதும் மொத்தம் 350-பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை இங்கே காணலாம்.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. பெங்களூரில் இதன் தலைமையகம் உள்ளது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இந்த வங்கியின் கிளைகள் உள்ளது. மொத்தமாக சுமார் 9,600 கிளைகளுடன் இயங்கி வரும் மிகப்பெரும் வங்கியாக கனரா வங்கி உள்ளது. பொதுத்துறை வங்கி என்பதால் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், இதர சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

job jobs canara bank

கனரா வங்கிக்கு தேவையான பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதுபோக அவ்வப்போது அப்ரெண்டீஸ் பணியிடங்களை நேரடியாகவும் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 3,000 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே அறியலாம்.

பணியிடங்கள் விவரம்: நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரம் ஆகும். தமிழகத்தில் மட்டும் 350 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னையில் 30 பணியிடங்களும், மதுரையில் 21 பணியிடங்களும், கோவையில் 27 பணியிடங்களும் என தமிழகம் முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் மொத்தம் 350-பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள். கேரளாவில் 200, கர்நாடகா - 600, புதுவை -5 என நாடு முழுவதும் மொத்தம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தியானவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உள்ளது.

ஊதியம் எவ்வளவு?: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு முறையை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்படும். அதன்பிறகு உள்ளூர் மொழித்திறன் பற்றிய தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பிக்கும் முறை: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டும். மத்திய அரசின் அப்ரெண்டீஸ்ஷிப் இணையதளத்தில் (www.nats.education.gov.in) விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வது அவசியம். அதன்பிறகு கனரா வங்கியின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க அவகாசம் வரும் 21 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 14.10.2024-ஆகும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி /எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் https://canarabank.com/UploadedFiles/Pdf/APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED.pdf செய்யவும் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+