நோ எக்ஸாம்.. ஆனால் அசரடிக்கும் சம்பளம்.. கனரா வங்கியின் துணை நிறுவனத்தில் சூப்பர் வேலை!
சென்னை: கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டிஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் துணை நிறுவனமாக கனரா வங்கி செக்யூரிட்டிஸ் லிமிடெட் (Canara Bank Securities Limited or CBSL) செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் தான் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
காலியிடங்கள்: கனரா வங்கி செக்யூரிட்டிஸ் லிமிடெட்டில் தற்போது 3 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி துணை மேலாளர் பணிக்கு 2 பேர், உதவி மேலாளர் பணிக்கு 12 பேர், ஜுனியர் ஆபிசர் பணிக்கு 12 பேர் என மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்பிஏ, சிஎப்ஏ, பிஜிபிஎஸ்எம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். மேலும் சம்பந்தப்பட்ட பணி பிரிவில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: துணை மேலாளர், உதவி மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 22 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜுனியர் ஆபிசர் பணியை விரும்புவோர் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின் படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு என்பது அளிக்கப்பட உள்ளது.
மாத சம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபடசமாக மாதம் ரூ.21,200 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.44,000 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் 22ம் தேதிக்குள் https://www.canmoney.in/ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications