வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கனானிக்கல் (Canonical) சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த பணிக்கு தேவையான தகுதி என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கனானிக்கல் (Canonical) ஐடி நிறுவனம் என்பது லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாப்ட்வேர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கு பிரிட்டன், சீனா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் கிளைகள் உள்ளன.

மேலும் இந்த நிறுவனத்துக்கு 70க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது கனானிக்கல் நிறுவனத்துக்கு சென்னையை அடிப்படையாக வைத்து வீட்டில் இருந்தே பணி செய்ய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி கனானிக்கல் (Canonnical) நிறுவனத்தில் லினக்ஸ் சர்வர் சாப்ட்வேர் இன்ஜினியரிங் மேனேஜர் (Linux Server Software Engineering Manager) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் லினக்ஸில் டெக்னிக்கல் ரோல்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக Ubuntu அல்லது Debian தெரிந்திருக்க வேண்டும். சி, சி++ மற்றும் பைத்தான் புரோகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர Ubuntu - kernel and userspace, deb/snap packaging, embedded linux, QEMU/KVM or OVS/OVN ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Amazon தரும் சூப்பர் ஆஃபர்.. சென்னை ஐடி நிறுவனத்தி்ல சூப்பர் வேலை..
இதுதவிர வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பணி அனுபவம், பணியாற்றும் இடம், திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பளம் தவிர ஆண்டு போனஸ், இன்சென்டிவ்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த 2004 முதல் வீட்டில் இருந்தே பணி செய்யும் முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். பெண்களுக்கு பிரசவ கால விடுமுறை வழங்கப்பட உள்ளது. மேலும் திறமையை வளர்க்கவும் நிதி உதவி செய்யப்பட உள்ளது.
அனுபவம் வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Canonical நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications