கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணி! மாதம் ரூ 1.50 லட்சம் ஊதியம்! அப்ளை பண்ணுங்க!
டெல்லி: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா அல்லது நவோதயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்குமாறு சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 4. ரூ 1.51 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் (Teaching), ஆசிரியர் அல்லாத (Non Teaching) பணிகளுக்கு ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
அதில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி, தொடக்கக் கல்வி ஆசிரியர் பதவிகள் உள்பட மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் ஆசிரியர் பதவிகளுக்காக மட்டும் 13,025 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த மொத்த காலிப்பணியிடங்களில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பதவிகளுக்கான இடங்களும் அடங்கும். மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நவோதயா வித்யாலயா சமிதி நாடு முழுவதும் 653 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நடத்துகிறது.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக குடியிருப்பு வசதிகளுடன் செயல்படும் இந்த பள்ளிகளில் நவீன இந்திய மொழிகளின் கீழ் கற்பிக்கப்படும் 7 மொழிகளில் தமிழும் ஒன்று.
அது போல் மூன்றாம் மொழி பிரிவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளன.
கீழ்காணும் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6. இதில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவிக்கு 1 இடமும் பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 5 இடங்களும் உள்ளன.
பட்டதாரி தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பொது பிரிவு 4, ஓபிசி-1 என்ற வகையில் நிரப்பப்படவுள்ளன.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதிகள்
முதுகலை பட்டதாரியாக இருத்தல் வேண்டும்
வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது வரை
தமிழ் பாடத்தில் பிஎட் படித்து முதுகலை பட்டப்படிப்பு படித்து 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். M.Ed முடித்திருக்கலாம்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்போர்:
வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பிஎட் படிப்பு அல்லது முதுகலை டிகிரியுடன் பிஎட் , எம்எட் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்போருக்கு கணினியை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரங்கள்
முதுகலை ஆசிரியர் பதவி (நிலை 8)- மாதம் ரூ 47,600 முதல் ரூ 1,51,100 வரையாகும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு (நிலை 7)- மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை.
தேர்வு செய்யப்படும் முறை
2 கட்டத் தேர்வு நடத்தப்பட்டு நேர்காணல் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
முதல் நிலைத் தேர்வு
ஓஎம்ஆர் தாளில் 100 கேள்விகளுடன் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் மொழி திறன் பகுதி இடம் பெறும்.
இரண்டாம் கட்டத் தேர்வு
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழ் மொழி தேர்வு நடைபெறும். இதில் 60 கொள்குறி வகை கேள்விகள் (Multiple choice question), 10 விரிவான விடையளிக்கும் கேள்விகளும் இடம் பெறும். இதையடுத்து நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி
தமிழ் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
https://www.cbse.gov.in/, https://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்
தேர்வு கட்டணம் 1500 ரூபாய், விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ 500 செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, PWBD பிரிவினர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்போது?
ஆன்லைனில் கடந்த 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு ஆகும்.












Click it and Unblock the Notifications