அடிதூள்..! 3,000 பேருக்கு மெகா வேலைவாய்ப்பு.. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் செம மாஸ் அறிவிப்பு
டெல்லி: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது அப்ரண்டிஸ் பணிகளுக்கு ஆட்களை எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த தேர்வுகள் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள்/ அலுவலகங்களில் நடத்தப்படும். நாடு முழுக்க காலியாக உள்ள 3,000 காலி பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும் எனத் தெரிகிறது. வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 6 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு வரும் மார்ச் 10ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தேர்வுக்கான கட்-ஆஃப் தேதி மார்ச் 31ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் nats.education.gov.in என்ற தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு: இந்த காலியிடங்களை நிரப்ப ஆன்வைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மேலும் உள்ளூர் மொழி தெரிந்து இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் தனியாகத் தேர்வு நடத்தப்படும். ஆப்டிடியூட், ஆங்கிலம், பகுத்தறிவு திறன், கணினி அறிவு, Basic Retail Liability Products, Basic Retail Asset Products, Basic Investment Products, Basic Insurance Products ஆகிய பிரிவுகளில் இதற்கான கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதற்கு முன்பு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ தொழிற்பயிற்சி பெற்றிருக்கக் கூடாது.. அல்லது தற்போது தொழிற்பயிற்சிப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கக் கூடாது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பயிற்சி அல்லது வேலை அனுபவம் உள்ள நபர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
வயது: அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1, 1996 மற்றும் மார்ச் 31, 2004க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பிக்கும் நபருக்குக் குறைந்தபட்ச வயது 20ஆகவும் அதிகபட்ச வயது 28ஆகவும் இருக்க வேண்டும். அதேநேரம் இந்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தொகை: இதில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ஸ்டைபண்ட் எனப்படும் உதவித் தொகை வழங்கப்படும். கிராமப்புற/ செமி அர்பன் பகுதிகள், நகர்ப்புற கிளைகள், மெட்ரோ பகுதியில் உள்ள கிளைகள் என அனைவருக்கும் ரூ. 15,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.. குறிப்பாக அவர்கள் மார்ச் 31, 2020க்குப் பிறகு தங்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: முதலில் www.nats.education.gov.in தளத்திற்குச் செல்லவும் அதில் உள்ள தொழிற்பயிற்சி போர்ட்டலை அணுகவும்.. அங்கே புரோபைலை உருவாக்கவும். ஒரு வேலை ஏற்கனவே apprenticeshipindia.gov.in இல் நீங்கள் புரோபைலை உருவாக்கி இருந்தால் லாகின் செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். அப்படி புரோபைல் இல்லை என்றால் அந்த பயிற்சி போர்ட்டலில் தனியாக உங்களுக்கான கணக்கை உருவாக்கவும்.
லாகின் செய்ததும் Apply Against Advertised Vacancy என்ற இடத்திற்குச் சென்று Apprenticeship with the Central Bank of India என்ற பிரிவுக்குச் செல்ல வேண்டும். அங்கே கீழே ஆக்ஷன் என்ற பிரிவில் சென்று அப்ளை பட்டனை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். தொடர்ந்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பிற தேவையான விவரங்களை வழங்கவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications